இலவச கிரையண்டர், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச பேருந்து அனுமதி, அரசு கல்லூரிகளில் பயிலும்  பி.ப மிக.பி.ப  தாழத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப் , மிகவும் வறியவர்களுக்கு இலவசமாக 35 கிலோ அரிசி போன்ற வாக்குஉறதிகள்  வாக்குகளை அள்ளி தரும்.

தமிழகத்தில் வேளாண் நிலங்களின் பரப்பு பெருமளவில் குறைந்து வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கின்றன. அதைபற்றி எந்த கட்சியும் கவலை பட்டதாக தெரியவில்லை.

வேளாண் தொழில் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை என  அங்கலாய்ப்பினை  தேசிய ஊரக வேலைவாய்ப்பு தி்ட்டத்தில்  வேளாண் பணிகளும்  எடுத்துக் கொள்ளப்படும் எனும் அறிவிப்பு ஒரளவு தீர்வை ஏற்படுத்தும். ஆனால்   அதிக விழுக்காடு மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் எனும் பொருளாதார வல்லுநர்களின்  கருத்துக்கு மாறாக அமையும்.

வேளாண் பணிகள் இல்லாத காலங்களில்   உள்ள  100 நாட்களில்  மட்டும் தேஊவே திட்டப்பணிகளை மேற்கொண்டால்  வேளாண் தொழில் பாதிக்காது என நினைக்கிறேன் .

நில உடைமையாளர்கள்  வேளாண் பணிக்கு  வேலையாட்கள் கிடைக்கவில்லை என்றும்  அதற்கு காரணம் 100 நாள் வேலை திட்டம் என  என புகார் தெரிவிக்கிறார்கள் . இவர்களின் புகாரில்  ஒரளவு நியாயம் இருந்தாலும்,  உண்மையில் விவசாயகூலியை உயர்த்தி  நியாயமான வேலை நேரத்துடன் விவசாய பணியாளர்களுக்கு பணிகள் அளிக்க நில உடைமையாளர்கள்  தயாராக இல்லை என்பது உண்மை . முன்பு  போல் குறைந்து கூலியை மட்டும் கொடுத்து, அவர்களை அவங்க வீட்டு  அடிமை போல் வேலை வாங்க முடியவில்லையே எனும்    அங்கலாய்ப்பு  தான் மேற்படி திட்டத்தை குறைகூற வைக்கிறது…..   நரிகள் அழுகின்றன  விவசாயம்  அழிகிறது என்று

ஏரிகள் குளங்கள் ஆக்கிரப்பு  அகற்றினால் வாக்கு குறைந்து விடுமென அந்த பணியின் பக்கம் எந்த கட்சியும்  கூட்டணியும் தலை வைத்து படுப்பதில்லை. முதலில் ஏரி இல்லாமல் போகும் பின்னர்  விளைநிலங்கள் மனைபிரிவுகளாக மாறும்   அதிக விலைக்கு நிலம்  கேட்கப்படும் போது ஜென்மம் பல எடுத்தாலும் கையில் கிடைக்காத பணம் கண்ணில்  காட்டப்பட ,  விவசாயிகள் தங்கள்   கையில் திணிக்கப்பட்ட பணத்தை பெற்று கொண்டு   பெரும் நிறுவனங்களுக்கு விளைநிலங்களை விற்று விட விளைநிலங்கள்  எல்லாம்  ஒப்பந்த கூலிகளைமட்டும்  வேலைக்கு  அமர்த்தும்  நிறுவனங்காளாய் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு களாய் மாறும்  அவலம்  தொடர்கிறது. ஏரி குளங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட குழு  கடந்த 5 ஆண்டுகளில் என்ன சாதித்தது எனத்தெரியவில்லை.

எந்த அனுமதியும் இல்லாமல் விளைநிலங்கள் மனைபிரிவுகளாக மாற்றப்படுவது   தடுக்கப்படும் என வாக்குறதி உள்ளது. அது இப்போ தும  நடைமுறையில் உள்ள ஒரு நிபந்தனைதான்.

வேளாண் நில பரப்பளவை நம்மால் உடனடியா பெருக்க இயலாவிட்டாலும் இருக்கும்  வேளாண் நில பரப்பை  கொள்ளை போகாமல் தடுக்க  விவசாய நிலங்கள்  எந்த பயனுக்காகவும் மாற்றக்கூடாது எனும் தடைச்சட்டம் தைரியமாக கொண்டு வரப்பட  வேண்டும்.

இல்லையேல் நம்ம தலையில் நாமே சந்தோஷமாக மண்ணை அள்ளி போட்டு  கொள்வதாகும்

 

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s