காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  தான் எடுத்த சபதத்தை முடித்து கொண்டு வருவதாக தெரிகிறது.  அவரது கணவரும்   நமது இந்திய முன்னாள் பிரதமரும்  ஆன ராஜிவின்  இழப்புக்கு பழி வாங்கும் நோக்குடன்

முதலில் சிங்கள அரசுடன் கை கோர்த்து  விடுதலைபுலிகளை அடியோடு ஒழித்து விட்டார்.

தாகம் தீராத அவர் விடுதலை புலிகளுக்கு உதவிய தமிழக மீனவர்களை பழி வாங்க   நடுக்கடலில் சிங்கள ராணுவ  தாக்குதலை கண்டு கொள்ளாமல் இருத்தல் போன்ற செயலை  செய்து கொண்டு இருக்கிறார்.

தற்போது  புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு அளிக்கும் கட்சிகளை ஒழிக்க ஆயுதம் தரித்து விட்டார்

அதன் முதல்  அடியாக  புலிகளின் ஆதரவு கட்சியான  பாமக வை  திமுக -காங் கூட்டணியில் சேர்க்க கூடாது  எனதிமுகவுக்க  காங் நிபந்தனை விதித்தது. திமுக வும் திகைத்து நிற்க.  என்னடா இப்படி ஆகிவிட்டதே என  திகைத்தது . விழித்து கொண்ட பாமக  அவர்களது  சின்ன அய்யா டெல்லி சென்றார்  .  சோனியாவிடம்  தங்களது புலி ஆதரவு சும்மாங்காட்டியும் தமிழர்களை ஏமாற்ற என சொல்லி  சமாதான படுத்தி  திமுக கூட்டணியில் இணைத்து கொண்டது. பின்பு ஒரு தொகுதியை காங்கிரசுக்கு தாரை வார்த்து தனது விசுவாசத்தை காட்டி கொண்டது.

திமுக கூட்டணியை உடைத்து  காங் தன்னிடம் வரும் என நினைத்த அதிமுக  அது நடக்காது போக காங்கிரசின் அன்பு பெட்டி நண்பர்  விஜய்காந்துடன் கூட்டு வைத்து கொண்டு உள்ளது.  காங்கிரசுடன் தேர்தலுக்கு பின் கூட்டு வைக்க  இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதற்காக  அதிமுகவின் காலை சுற்றி வந்த  வைகோவை  கூட்டணியில் இருந்து விலக்கி வைத்து விட்டது. ஆனாலும்  மதிமுகவின் ஓட்டுக்காக சின்ன பசப்பு வார்த்தைகளுடன்  கடிதம் எழுதினார்  ஜெ.

ஆனால்  பொங்கி எழும் வைகோ உள்குத்தை புரிந்து கொண்டு   தேர்தலில் போட்டியிட வில்லை என அறிவித்து விட்டார்.   விட்டால் அரசியல் துறவறம் கூட போய்விடுவார் போல் உள்ளது. . ஏனெனில் இங்கு  தமிழர்களுக்கு ஆதரவாக பேசினால்  தேசத்துரோகி ஆக்கப்படும் அபாயம் உள்ளது.

டாஸமாக் கடையில் விழுந்து கிடக்கும்  தமிழன் தன்உணர்வு பெறுவதே ரொம்ப கஷடம்  அதெல்லாம் தெளிந்து இன உணர்வு கொள்வது அதிலும் ரொம்ப கஷ்டம். நம்மை நம்பி விடியாதா  என எண்ணும் நம் இன மக்களை நிணைக்கும் போது …………….

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

6 responses »

  1. ஜான் செல்வராஜ் சொல்கிறார்:

    பி்த்தராய்ப் போன தமிழர் நடுவே சுத்தராய் விளங்கும் சுந்தரத் தங்கையே !
    அழுகிய கத்தரிக்காய்கள் நடுவினிலே அழகிய ரோஜா போன்றவர் நீங்கள்.வீசிப் போன பாசிப்பயிர் பாயாசம் அருகே வீரியமாய் வீற்றிருக்கும் வெங்காய தோசை நீங்கள்.
    தங்களின் சமீபத்திய படைப்பான விடுதலைப் புலிகளின் அழிப்பை வாசிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன். டாக்டர் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப் படும் ஆய்வுக் கட்டுரை போல் அபாரப் பொருள் கோர்வை.
    தேர்தலிற்குப் பி்ன் காங்கிரசோடு கூட்டணி வைக்கவே ஜெயலலிதா வைகோவை முதுகில் குத்தி மூக்கைப் பேர்த்து அனுப்பியுள்ளார் எனும் விஷயத்தை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.கூடிய சீக்கிரம் ஐ நா சபை பொதுச் செயலாளர் ஆகி விடுவீர்கள்.

  2. பூனை சொல்கிறார்:

    சோனியா காந்தி பழி வாங்கும் நோக்குடன் செயல்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் லண்டன் புலி தலைவர் சுரேந்திரன் சோனியா காந்தி தங்கள் மீது அன்பு கொண்டவர் என்ற கருத்துபட BBC பேட்டி அளித்துள்ளாரே!

  3. பூனை சொல்கிறார்:

    லண்டன் புலி சுரேந்திரன் மட்டுமல்ல விடுதலை புலிகள் எல்லாமே புலி தோல் போர்த்திய நரிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s