இன்று  இந்து  நாளிதழில்  நண்பர் ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தியாவில்    தினமும் 47 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டு இருக்சிறார்கள்  நாம் உலக கோப்பையில் இந்தியாஅடைந்த  வெறறியை  கொண்டாடி மகிழ்வது என்ன நியாயம் எனவும்   மேலும் பட்டு இறக்குமதி வரி தளர்வினால்   பாதிக்கப்பட்டு  அதனால் ஏற்பட்ட    கடன் தொல்லையால்   தற்கொலை செய்து கொண்ட இளம் விவசாய தம்பதியரின் அவலத்தை எழுதியிருந்தார். அவரது கட்டுரையில் ஒரு நியாயம் இருக்கிறது. அவர் கட்டுரையின் முடிவில் நான் கிரிக்கெட்டை வெறுப்பவன்  அல்ல ஆனால் விவசாய தற்கொலைகள்  நடைபெறவிடாமல் தடுக்கப்பட்டால்  தானும்  இந்திய வெற்றியை கொண்டாடுவேன் என எழுதி யிருந்தார்.  இது சாத்தியமாகலாம்.

ஆனால் இவர் வருத்தத்தின் அளவு இந்திய விவசாயிகளின் தற்கொலையுடன் முடிந்து விட்டது. ஆனால் உலகம் முழுவதும் உள்ள  விவசாயிகளின்  துன்பம் தற்கொலைகள் முடிவுக்கு வந்த பின் தான் ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சொன்னால் அது  நடக்க கூடிய காரியமா.

“தனி ஒருவனுக்கு  உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என சொன்ன பாரதி கூட அவரது மணைவி மற்றும் குழந்தைகளின்  பசியை  கண்டு ஒரு கிராமத்தை கூட அழிக்க முடியவில்லை.  முரணாக  “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” எனறு பாடி உள்ளார். எல்லாருடைய  ஏன்  எல்லா உயிர்களின் துன்பங்களும்  அகன்ற பின் தான்  விழாக்களை கொண்டாட வேண்டும்  வெற்றிகளை கொண்டாட வேண்டும் என்றால் நடக்க கூடிய காரியமா.  அப்படி என்றால் உலகே சோக மையமாய் போய்விடாதா.

பக்கத்து வீட்டில் மரணம் சம்பவி்த்த  சமயத்தில்  சத்தமாக தொலைகாட்சி பார்க்கும் நம் சென்னைவாசிகள் அந்த நாள் மட்டும் தங்கள் தொலைகாட்சி யினை தவிர்க்கலாம்.  அதைப்போல் கிராமங்களில் கோயில்  திறக்க வேண்டும் உடனே இறந்தவரை எடுங்கள் என நச்சரிப்பு  போன்றவற்றினை  தவிர்க்கலாம்.

நமது நாட்டு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் விவசாய   மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை  நாம் ஒவ்வொருவரும்  எதிர்க்க வேண்டும்  குறைந்த பட்சம்  வலைதளத்திலாவது அவர்களின் கஷ்டங்களை  சொல்லி  குரல் எழுப்பி அரசின் பார்வைக்கு கொண்டு வரவேண்டும்.

அநியாயங்களை எதிர்த்து போராடுவோம்  அதை நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணத்தில்   இந்தியாவின்  உலககோப்பை வெற்றி  போன்ற ( எப்பாவது தான இந்த மாதிரி  மகிழ்ச்சியான தருணங்கள் வருகின்றன)நேரத்தில் மகிழ்ச்சியாக  கொண்டாடுவோம் .

நம்ம வாழும் தெருவில் இரண்டு பேர் நமக்கு தெரியாமல் ஏன் நமக்கு தெரிந்தும் கூட  பசியோடு இருக்கலாம். அதற்காக நாம் என்ன குளிக்காமல் சாப்பிடாமல் நல்ல ஆடை உடுத்தாமல்  வேலைதளம் செல்லாமல் இருக்கிறோமா  என நான் யோசிப்பது உண்டு

ஒரு நாள்  தி நகரிலிருந்து    பெருங்களததூர் வரை   குளிரூட்டபட்ட  பேருந்தில்சென்று கொண்டிருந்த போது  தாம்பரம் பேருந்து நிலையம் அருகில்  புதிதாக கட்டப்பட்ட  பாலத்தின் அடிப்பகுதியை தங்களது வசிப்பிடமாக வாழும் ஒரு வயதான தம்பதிகளின்  இளம் மகன் அம்மணமாக  அவர்களுக்கிடையே ஓடி விளையாடி கொண்டிருந்தது  அது வரை குளுமையான  சுகமான பயணத்தில் இளையராசாவின் இனிய பாடலை செவி மடுத்து வந்த என்  மகிழ்ச்சியை  குற்றப்படுத்தியது என் மனது.  ஏன்  என்று  தெரியவில்லை. ஒரு வேளை அந்த நிலையில் இல்லாவிட்டாலும் அதற்கு சில அடுக்குள்  மேலே  உள்ள நிலையிலிருந்து  முன்னேறி வந்ததால்  எனக்கு குற்ற உணர்வு தோன்றியது என நினைக்கிறேன்.

காந்திஜி  , மேலாடை க்கு வழியில்லாத தமிழ் பெண்ணை கண்டு தான்  மேலாடை அணிவதை   விட்டு விட்டது  நினைவு வந்தது.  பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்கள் தான்

மனதுக்குள்  எளிமையாக வாழ  வேண்டும் என நினைத்து கொண்டேன்.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s