நேற்று  லோக்சபா    தொ.கா யில்  antarjali yatra எனும் வங்காள படம் ஒளிபரப்பபட்டது. 1987 -ல் வெளிவந்த  படம்.1988 ஆண்டு க்கான தேசிய சிறந்த பட விருது பெற்று உள்ளது. இதன் இயக்குநர் கவுதம் கோஸ். நடிகர் சத்ருகன்சிங்  சின்ஹா  முக்கிய பாத்திரத்தில் நடித்து உள்ள படம். மீணடும் லோக்சபா  தொகா வில் இன்று மதியம்  2 மணிக்கு  ஒளிபரப்பப்படும்.

வங்காள மொழியில் மட்டும்  இவ்வளவு நல்லபடம்  எடுக்கிறார்கள்.  காட்சி முழுவதும் கஙகை கரை  ஓரத்து  சுடுகாட்டு பகுதியில் ஒர்அரங்க நாடகம் போல் அழகாக ஆழமாக செல்கிறது.   உடன்கடடை ஏறதலை சாடும் இந்த படம் . மனித மனங்களை  அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

70 வது  80 வது வயது மதிக்க தக்க  ஒரு வயது முதிர்ந்த பிராமணன்  இன்றைக்கு சாவதா நாளைக்கு சாவதா  என கிடையில் கிடக்க அவரை கங்கையின் கரையில் படுக்க வைத்து அந்த உயிர்  மோட்சம் அடைய  பல் வேறு சடங்குகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் ஒரு மகனும் இன்னொரு பக்கம் இன்னொரு மகனும்  அமர்ந்து  தகப்பனார் எப்ப  இறப்பார் என காத்து இருக்கிறார்கள். பிராமண வைத்தியர் நாடிதுடிப்பை கணித்து கொண்டிருக்கிறார். பக்கத்தில்  பிராமண ஜோசியா  கிழவனின் ஜாதகத்தை வைத்து அவர் எப்போது இறப்பார் என  ஆராய்ச்சியில் இருக்கிறார். சத்ருகன் சின்ஹா   சுடுகாட்டு  வெட்டியான் அல்லது குடிமகனாக  உள்ளார்.  வங்காளத்தில சண்டாள்  என அழைக்கப்படுகிறார்.

பிராமண ஜோசியர்  கிழவர் பெளர்ணமி அன்று இறந்து விடுவார் என சொல்கிறார். பின்னும் ஜாதகத்தை கணித்து அவருக்கு    சனி கிரகம் மற்றும் சந்திர கிரகம்   பலன் தற்போது இருப்பதால் அவர் தனியே சாக மாட்டார்  தன் கூட  ஒருவரை அழைத்து தான செல்வார் என சொல்லுகிறார் .  சண்டாள்,  தன்னை அழைத்து செல்வாரா என  வினவ   கீழ்சாதியையா அழைத்து செல்வார்,  பிரமணரைதான் அழைத்து செல்வார் என கேவல படுத்த படுகிறார். பிரமண ஜோதிடரின்   பிரமண நண்பர் தனது   கல்யாணமாகாத பெண்ணை கரையேற்ற கிழவருக்கு மண முடித்து உடன்கட்டை  ஏறச்செய்வது என முடிவு செய்கிறார் . அனைவரும் சம்மதிக்க புதுப்பெண் பயத்துடன்   திருமணம் நடைபெறுகிறது.

கிழவர் கொஞசம் கொஞ்சமாக தேறி வருகிறார்.  சொத்துக்காக    மகன்கள்  கால்மாட்டில் காத்திருக்க  அவாகளிடம்  கிழவரின்  உடமைக்கான சாவியை  புதுப்பெண் விட்டெறிய  அவர்கள் தங்களுக்கு சண்டையிட்ட வாறே அவ்விடம்விட்டு  ஓடி விடுகிறார்கள்.

உடன்கட்டை ஏறும் மகள்  தனது  தந்தையின் கடனை கழித்து தான்  செல்ல வேண்டும் என சாஸதிரம் சொல்ல அந்த கடனும்  அப்பெண்ணால் அளிக்கப்பட்டு அவளது தந்தை  சுடுகாட்டுக்கு வருவது நின்று விடுகிறது.  மரணப்படுககையில் கிழவன் பக்கத்தில்  புதிய மனைவி மட்டும்  பணிவிடை செய்து கொண்டு இருக்கிறாள்.

சதி  தீ யில் அப்பெண்  உடன்கட்டை ஏறுவதை விரும்பாத  குடிமகன்   வைத்திய பிராமணனிடம்  காவல் துறையிடம் புகார் அளிக்க சொல்ல அவர் நீதான்  சுடகாட்டு க்கு    நிர்வாகி நீ காவல் துறையிடம் சொல் என சொல்ல  கீழ்சாதிக்காரன் சொன்னால் காவல்துறையினர் கேட்க மாட்டார்கள் என குடிமகன் சொல்ல   வைத்திய பிராமணன்  அவர் சொன்னால் அவரை  ஜாதி துவேஷி ஆக்கி விடுவார்கள் என சொல்லுகிறார்.   வெறுத்து போன  சண்டாள்   தான் உடன்கட்டைக்கு நெருப்பு  மூட்ட மாடடேன என சொல்லி  திரிகிறான்.

கிழவர்  சாவதாக தெரியவில்லை .  பது மணப்பெண்  உடன்கட்டை ஏறுவதை விரும்பாத   குடிமகன்  அவனை அங்கிருந்து ஓடி போய் விடுமாறு பயமுறுத்து கிறான் ஆனால் அவள்  ஓடுவதாக இல்லை.  எப்படியும் நாசமாக போங்கள் என  சென்று விடுகிறான். பின்  சில நாட்கள்  கழித்து  தைரியத்தை வரவழைக்க  மூச்சு முட்ட குடித்து விட்டு   இரவில் கிழவனை குண்டு கட்டாக தூக்கி கங்கையில் போட செல்கிறான்.  விழித்து கொண்டபுதுமணப்பெண்   அவனை கத்தில் குத்தி விடுகிறாள். குடிமகன் கத்தி குத்தில் ரத்தம் ஒழுக சகதியில் கிடக்க  கிழட்டு பிராமணனும் முணங்க   கிழவனை கவனிதது விட்டு  ரததம் ஓழுகும்  குடிமகனுக்கு கட்டு போட வருகிறாள். அவன் தன்னை  தொடக்கூடாது என சொல்ல……..தொட …..  அது  உறவில் முடிக்கிறது.

. பெளர்ணமி நெருங்கியும் கிழவர் சாகவில்லை.  கிழட்டு பிராமணன் தனக்கு பால் வேண்டுமென கேட்க  தான் எங்கு போய் வாங்குவது என  புதுமணப்பெண் வினவ  சண்டாளை போய் வாங்கி வரச்செய்  எனகிழவன்  சொல்கிறான் . புது மண்ப்பெண் சண்டாள் வீட்டு க்கு சென்று அவனிடம் பால் வாங்கி வரசொல்ல,   அவன் தான் போய் வாங்கி வந்தால் தீட்டு,   தன்வீட்டு ஆட்டு பால் தருகிறோன்  என  சொல்லி  பால் கறக்க  அந்த பெண் பாத்திரத்தில் பிடித்து கொள்கிறாள். இருவரும் கலகலப்பாக பேசி கொண்டு வர , கிழட்டு பிராமனுக்கு புது மணப்பெண் மீது சந்தேகம்  வந்து அவளை கங்கையில் முழ்கி  சாக சொல்ல அவளும் அதை ஏற்று ஆற்றுக்குள் இறங்க எத்தனிக்க,   சண்டாள் தடுத்து அவளை விரட்டி விடுகிறான்  அவள் ஓடி போய் கரையில் மயங்கி விழுந்து கிடக்கிறாள். இரவு வருகிறது  சண்டாள் தனது வீட்டுக்கு சென்று விடுகிறான்.  மறுநாள் அதி காலையில்……. கங்கையில் வெள்ளம்   கொஞ்சம் கொஞ்சமாக ஏற  கிழட்டு பிராமணன்  தண்ணீரில் முழ்கி இழுதது செல்ல படுகிறான.  விழித்து கொள்ளும் புது மணப்பெண  கிழவரை காப்பாற்ற செல்ல  அவளை காப்பாற்ற சண்டாள்  ஆற்றில் இறங்கிறான் அதற்குள் புதுப்பெண்ணும்  கிழவனும்  கங்கையில்  முழ்கி  விடுகிறார்கள் இழுத்து கெல்படுகிறார்கள்.  காப்பாற்ற முடியாத சண்டாள்  கரையில் இருந்து  சத்தமாக கூக்குரலிட்டு  புதுபெண்ணுக்காக  அழுது கொண்டு இருக்கிறான். இந்த படத்தில் கண்கள் வரைந்து ஒரு படகு கரையில் கங்கா தேவி நடப்பதை எல்லாம் பார்தது கொண்டிருப்பது போல் காட்சியாக்கப்பட்டவிதம் நன்றாக உள்ளது.

இனனும் இந்த அழுகிய பழக்கம் ராஜஸ்தான் மக்களிடம் உள்ளது கேவலமானது.

 

 

 

 

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s