காந்தியின் பிறந்த நாள்  நாளை வருகிறது. ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் காங்கிரஸ்காரர்களும் அரசும் விழா எடுப்பதை தவிர வேறு ஒன்றும் பெரிதாக நடப்பதில்லை. பெரிய சானல்களில் காந்தியின் திரைபடத்தை ஒளிபரப்புவார்கள். அவ்வளவுதான.  ஆம. அன்று விடுமுறை என்பதை தவிர பெரும்பாலான மக்களால் போலி சாமியாருக்கு கொடுக்கும் மரியாதை கூட கொடுப்பதில்லை.எம்ஜிஆரின் பிறந்தநாள் என்றால் அதிமுக காரர்கள  தெருவேங்கும்  படம் வைத்து கொண்டாடுகிறார்கள். அண்ணாவின் பிறந்தநாளில் அரசு நலத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அம்பேத்கார் பிறந்த நாளை தாழ்த்தப்பட்ட மக்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்துக்களுக்க துரோகம் செய்து விட்டதாக இந்துக்கள் காந்தியை பெரிதாக சிலேகிப்பது  இல்லை. தலித்துகளுக்கு  ஆதரவாக இல்லை என்று தலித்துகள் காந்தியின் மேல்  கோபத்துடன் உள்ளார்கள்.  இஸ்லாமியர்களை பெரும்பான்மை இந்துக்கள் பாதுகாக்க வேண்டும்  எனும் எணணத்துடன் செயல்பட்ட  காந்தியை அவர்களும் பெரிதாக நினைப்பதில்லை.ஏன் ரூபாய் தாளில் உள்ள காந்தி படத்தை  நல்ல நோட்டா கள்ள நோட்டா என வெள்ளி கோட்டை பார்க்கும் அளவுக்கு கூட  யாரும் ஓட்டு  சரியாக பார்பதில்லை.காந்தி படத்தை போட்டு  பேனர் அடித்து  பஞசாயத்து தேர்தலில் கூட கேட்பதில்லை. நமது தேச தலைவர்களின் புகழ் அவர்கள் எந்த சாதியில் பிறந்து இருக்கிறார்கள் என்பதை கொண்டும் அவர்களது வாரிசுகள் அரசியலில் இருப்பதை ஒட்டியும் தான் தீர்மானிக்கப்படுகிறது.  காந்தி  பனியா சாதியில் பிறக்காமல்  இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஒரு சாதியில் பிறந்திருந்தால் அந்த சாதி மக்களால்  தங்களுக்கு பெருமை காட்ட ஒரு தலைவன் கிடைத்தான் என  போற்றபட்டிருக்க கூடும். காந்தி நியாயமாக நடந்தால்தான  யாருக்கும் வேண்டியவராக இருக்கவில்லை. ஏதாவது ஒரு நேரத்தில் நியாத்தின் காரணமாக ஒவ்வொருத்தருக்கும்  பிடிக்காத ஒரு முடிவை அவர் எடுத்திருக்க வேண்டும். அதனால்  யாரும்   அவர் படம் இருக்கும் ரூபாயை .விரும்பும் அளவுக்கு  கூட அவரை விரும்ப வில்லை

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

One response »

  1. perumal.s சொல்கிறார்:

    ELLORKKUM NALLAVAN THANNAI EZHANTHAAN

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s