ரொம்ப நாளைக்கு பின் ஒரு நல்ல படம்  பார்த்த திருப்தி.   தனது அப்பாவின்  ஆசையான  ” அரசு வேலை  கிடைக்க ஏதுவாக  முன்னுபவம் மாதிரியாக  தொண்டு நிறுவன கிராம சேவக் வேலைக்கு வேண்டா வெறுப்பாக  செல்லும்  மனிதன் கதையின் நாயகன் ஆவது தான் கதை.  கதைகளம்  புதுக்கோட்டை மாவட்டம்  கிராமம். அந்த மாவட்ட பேச்சு நடை நன்றாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. கதாநாயகன் என்பதற்குரிய குணாதியசங்களான பத்து பேரை அடிக்கும் சக்தி, சுயநலமே இல்லாத பண்பு,எல்லாரையும்  விட அதிக புத்திசாலிதனம்,  சிறப்பான ஆடைஅணிகலன்  ஏதுவும் இல்லாமல் சாதாரணமான மனிதனாக வளைய வரும் விமல் மற்றும் கதாநாயகி    படத்தில் நடித்திருக்கும அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.  இயக்குநரை ரொம்ப பாராட்ட வேண்டும் . அவரது முந்தை படமான களவானி யைவிட இந்தபடம் சிறப்பானது.   அரசு வேலை வேண்டாம்  நான் திரும்பவும் அந்த மக்களின் பிள்ளைக்கு கல்வி கற்பிக்க போகிறேன் என  சொன்ன உடன் விமலின் அப்பா பாக்யராஜ்  கொஞ்சம் கூட பழைய ஆசையை உடனே கைவிட்டுவிட்டு   ஒத்துக்கொள்வது சினிமாத்தனமாக உள்ளது.பாட்டுகள் படத்தில்  தேவையில்லை இருந்தாலும் வந்து செல்லுகிறது. இரட்டை கோடு நோட்டு வாங்க கூலி காகை கொடுத்த சிறுவனுக்காக விமல் திரும்புவது  நல்ல  கதைஅமைப்பு. இயக்குநர் சொன்ன மாதிரி காதல்  ஒரு சொறுகல் என்றாலும்  கிராம சேவக் வேலையும் இல்லை    கதாநாயகனுக்கு கதாநாயகியின் மேல் காதல் கடைசி வரை காதல் இல்லை என்பதை அந்த கொத்தடிமை தொழிலாளர்களின் பிள்ளைகளின் அறிவு கண்ணையும் திரும்ப திறக்கவேண்டும்  என்பதற்காக காதலை ஏற்றுக் கொண்டது போல்  காட்டிஇருப்பது சிறப்பு. மரங்களை வெட்டி செங்கல் சுட்ட பாவத்திற்கு வருந்தும் குருவிக்காரர் பாத்திரம் வித்தியாசமானது.  குருவி இல்லை என்றும் சொல்லும் காட்சியில் நமக்கு நம் மேல்  கோபம் வரவேண்டும்  . நாமும்  செல்போன் டவர்களை நிறுவி நகரங்களிலிருந்து குருவிகளை விரட்டி விட்டோம்.மருந்துக்சகூட  அழகான இடங்களை காட்டாமல்  வறண்ட பூமியை காட்டி இருப்பது நமக்கு விடும் எச்சரிக்கை . தொழில்மயம் தொழில்மயம் என்று நமது தமிழகத்தில்  அதிக தொழிற்சாலை நிறுவ பட்டால் இந்த படத்தில் காட்டிய கிராமம் மாதிரி  தமிழகம்  வெளிறிய மஞசள்  பூமியாகி விடும். பணத்திற்காக இராமநாதபுரம் மாவட்ட த்தில் மூட்காடுகளாக்கப்பட்டது   படம் பார்க்கும் போது நினைவில் வந்து செல்லுகிறது. தமிழக மக்களின் வாழ்க்கையை பற்றிய ஒரு நல்ல பதிவு.சுரண்டுபவர்களிடமிருந்து மீட்க படுபவர்கள் மீண்டும் வேறு சுரண்டுபவனிடமே மாட்டி கொள்வார்கள் என்பதை காட்டி இருப்பது. எல்லா காலத்தின் அரசியலுக்கும் பொருந்தும். சிறுவர்கள் சிறப்பாக (நடித்து உள்ளார்கள) இயல்பாக வாழ்கிறார்கள்.கதாநாயகி  தான்  விமலை கல்யாணம்  சீர்சென்த்தி  செய்ய பணம்  அதிகம் தேவை படும் என்பதை அறிந்த உடன்  டீ  மறறும் சாப்பாட்டு விலையை உயர்த்துவது நல்ல காட்சி.  விமலை  செங்கல்சூளை முதலாளியின் ஆட்கள்  அடிக்கும் போது  ஏன்டா அடிக்கீறிங்க என விமல்  கேட்பது போக மறுப்பது  போன் ற காட்சியில் விமல் நன்றாக நடித்து உள்ளார். ஆட்டின் முன்  நீ எனன புலியா என கேட்டு அடிபடுவது நல்ல நகைச்சுவை.   பள்ளிகூடம் செல்லாத சிறுவர்களுக்கு தெரிந்த விபரம் படித்தவனுக்கு தெரியாமல்  இருக்கிறது. அப்பாவின் வேலையில் உள்ள விபரங்கள் பிள்ளைக்கு தெரியாமல் இருபப்து  போன்றவை உண்மையின் பிரதிபலிப்பு.   ஒரு தடவை என் நண்பரிடம்  பத்திரிக்கையில்  படித்த மீன்மழை பற்றி  சொன்ன போது கிண்டல் பண்ணி சிரித்தான். நீங்கள் உங்கள் படத்தில் மீன் மரம் ஏறும் என்று சிறுவர்கள் வாயால் சொனன போது எனக்கு உண்மையா இருக்குமா என சந்தேகம் வந்தது. நீங்கள. அதனை காட்சி படித்திருப்பது  நன்றாக இருந்தது. அது சினிமாவுக்காகவா உண்மையில் மீன் மரம் ஏறுமா?.  வங்காள மலையாள படங்களை பார்க்கும்  போது சே தமிழ் இது மாதிரி நல்ல படங்கள் எடுக்கவில்லையெ எனும்  ஆதங்கத்தை போக்கி உள்ளது உங்கள் படம். மக்களே  தயவு செய்து இந்த மாதிரி படங்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

4 responses »

  1. அமர் சொல்கிறார்:

    தங்கள் பரிந்துரைக்கு நன்றி நண்பா

  2. Kaettapaadal சொல்கிறார்:

    மிக நாட்களுக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ் படம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s