கடந்த இரண்டு வாரங்களாக   அடுத்தவர் எ.ட்டி.எம் கார்ட் தகவல்களை பயன்படுத்தி பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பல்கள்  பிடிபட்டு வருகின்றன. அவற்றை படிக்கும் போது  நம்ம ஆட்களின் மூளை  கிர்மினல்தனமான புத்திசாலிகளாக  இருப்பது தெரியவருகிறது .  எ.ட்டி.எம்  இயந்திரத்தில்   slim skimmers  எனும் கருவினை வைத்து நாம்   நமது எ.ட்டி.எம் கார்ட்டை  எ.ட்டி.எம் கார்ட் இயந்திரத்தில்  சொருகும் போது  நமது  எ.ட்டி.எம் கார்டில் உள்ள தகவல்களை நகல் எடுத்து  அதனை கொண்டு  புதிதாக  எ.ட்டி.எம் கார்ட் உருவாக்கி  நமது பணத்தை கொள்ளை அடிக்கிறாக்கள் . இன்னொரு வழி என்னவென்றல்  சம்பத்தப்பட்ட வங்கி  நமக்கு  எ.ட்டி.எம் கார்டை கொரிஎர்  மூலம் அனுப்பும் போது  சக்தி வாய்ந்த  காற்று துப்பாக்கியை வைத்து  கவரை பின்பக்கம் உடைத்து  புது  எ.ட்டி.எம் கார்டை எடுத்து  தகவல்களை நகல் எடுத்து  நமது கார்டுக்கு நகலை தயாரித்து  பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். நாகேந்திர நகர்  வேளச்சேரி  ராயபேட்டை ஹை ரோடு  மயிலாப்பூர்  ர;கே மட்ரோடு மந்தவெளி  பூந்தமல்லி  ஹை ரோடு  அரும்பாக்கம்  புள்ள நிழற்சாலை  ஷெனாய் நகர், போஸ்டல் காலனி  மெயின் ரோடு மேற்கு மாம்பலம் பால்பூர் ரோடு  கிழ்பாக்  காந்திமண்டபம் மெயின்ரோடு  கொட்டுர்புரம்  அண்ணாசாலை  சைதாபேட்டை  ஆகிய இடங்களில்  அமைந்துள்ள   எ.ட்டி.எம் இயந்திரங்களில்    எ.ட்டி.எம் கார்ட்  தகவல்கள்  திருடப்பட்டதாக  காவல் துறை தெரிவிக்கிறது.  எனவே  எ.ட்டி.எம் கார்ட்  வைத்திருப்பவர்கள்  தங்களது  கடவு சொல்லை   pass word  யை  மாற்றிவிடுமாறு  காவல் துறை கேட்டு கொண்டு உள்ளது .  அடிக்கடி   கடவு சொல்லை  மாற்றுவது நல்லது என்றாலும்  கார்டை பயன் படுத்துவதற்கே  அடுத்தவர் தயவை நாடுபவர் இருக்கையில்   கடவு சொல்லை  அடிக்கடி மாற்றுவது கஷ்டமான செயல்  .  அதிகமான தொகையினை நீங்கள்  உங்கள் கணக்கில்  வைத்து கொள்ளாதீர்கள். வேறு கணக்கில்  எ.ட்டி.எம்  கார்ட் வாங்காமல்   பணத்தை  வைத்து கொள்ளுங்கள். முன் பதிவு, கட்டண செலுத்துதல்  போன்றவை களுக்கு  தேவையான  பணத்தை மட்டும் எ.ட்டி.எம் கார்ட் வைத்திருக்கும்  சேமிப்பு கணக்கில் வைப்பது நலம்.
Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s