நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்  தமிழகத்தில்  அனைத்து கட்சிகளும் ஏறத்தாழ தனித்தனியாய் நின்று  தேர்தலை சந்தித்தன. அதனால் நமக்கு ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலம் தெரிய வந்து உள்ளது.

அதிமுக       :  39.02

திமுக            :  26.10

தேமுதிக     :  10.11

காங்               :    5.71

பாமக           :     3.55

மதிமுக       :      1.70

பாஜக           :      1.35

சிபிஎம்        :      1.02

சிபிஐ            :       0.71

சுயேச்சை :       9.46

தேமுதிக  சிபிஎம்   ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து உள்ளன. தேமுதிக சில இடங்களில் சிபிஐ யுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து உள்ளது.  நகர் புறங்களில் தேமுதிக விட சுயேச்சைகள் அதிக வாக்குகள் வாங்கி மூன்றாம் இடத்தில் உள்ளன.

 

இன்னும்  இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடாளுமன்ற தேர்தல் வந்து விடும். அப்போது  தமிழக  சிறு கட்சிகள் பெரிய கட்சிகளிடம்  எத்தனை இடத்தில் தங்களுக்கு தர வேண்டுமென  முந்தைய தேர்தல்கள் போல் பேரம் செய்ய இயலாத நிலை வந்து உள்ளது.

உள்ளாட்சி  தேர்தல் என்பதால்   ஆளும்கட்சிக்கு வாக்களித்தார்கள் எனும் வாதம் எந்தளவுக்கு எடுபடும்  என்பது சொல்ல முடியாது. இருந்த போதிலும் ஏறத்தாழ எல்லா கட்சிகளின் நிலையும்  இந்த நிலையில் தான் இருக்கும்.

திமுகவை காங்கிரஸ் இனி ரொம்ப முறைக்க முடியாது. அதைபோல் தேமுதிக வை  அதிமுக கிள்ளுகீரையாக நினைக்க முடியாது.பாஜக வெற்றி பெற்ற இடங்கள் பிற மாநில தாக்கம் உள்ள பகுதியாகவும் ஏற்கெனவே மதவேறுபாடுகள் உள்ள பகுதியாகவும் உள்ளன. கம்யுனிஸ்டுக்ள் வென்ற பகுதிகள்  தொழிலாளர் நிறைந்த பகுதியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. மதிமுக தனது பலத்தை இந்த தேர்தலில் காட்டி உள்ளது  அது தமிழர்களுக்கு கொஞ்சம் இனஉணர்வு உள்ளது என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது. காங்கிரஸின் தோல்வி அந்த கட்சி  தமிழர்களிடம் இருந்து எந்தளவுக்கு அந்நியபட்டு கிடக்கிறது என்பதை நிருபிக்கிறது.

எது எப்படி இருந்தாலும்  அதிமுகவும் திமுகவும்  தான் தமிழகத்தின் பெரிய கட்சிகள் என்பதும்  மாறி மாறி இந்த கட்சியில் ஒன்றுதான் ஆட்சி செய்யும் என்பது தமிழகத்தின் தலைவிதி. ஒரு தடவை தமிழ்மாநில காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும் வாய்ப்பு வந்தபோது அதனை திமுகவிற்கு மூப்பனார் தாரை வார்த்து விட்டார்.

மூன்றாம் அணி அமைத்தாலும்   அதிமுக/ திமுக ஆகிய கட்சிகளின் ஆதிக்கத்தை  தமிழகத்தில் எந்த கட்சியும் தகர்க்க இயலாது.

மேற்படி இரண்டு கட்சிகளின் தோள்மீது  மீண்டும் சவாரி செய்யும் போக்கு  வரும் என  எதிர்பார்க்கலாம்.சும்மாவே  அதிமுக  எல்லா கட்சியையும்  ஒரு மாதிரி பார்க்கும் இப்ப    எப்படி பார்க்கும் என்று அந்தந்த கட்சிகளுக்கே தெரியும்.  இனியாவது திமுக கூட்டணியை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக  காங்கிரசுக்கு  தொகுதிகளை அள்ளி கொடுக்கும்  போக்கை நிறுத்தி  கொள்ளும் என எதிர்பார்கலாமா என தெரியவில்லை.

அடுத்த சட்டமன்ற கூட்டத்தில்  அனைத்து  கட்சிகளின் மனநிலை தெரிந்து வி டும்.

 

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s