கடந்த   23   ஆம்  தேதி  என்னுடைய  மகள்   BIS  தேர்வு எழுத  மாடர்ன் சீனியர்
செகண்டரி ஸ்கூல்  நங்கநல்லூர் க்கு  அழைத்து சென்றேன் . மூன்று மாடி கட்டிடம் பா
வடிவில்  உள்ளது. தேர்வு  ஹால் ஒதுக்குவதில் கொஞ்சம்  குளறுபடி இருந்தது.  ஐந்தாம்
அறையை ஒதுக்கியதாக  நோட்டீஸ் போர்டில்  குறிப்பிட்டு இருந்தது.
ஆனால்  ஒன்றாம் அறையில் எழுத வைத்தார்கள். தேர்வுக்கான  மணி அடித்தவுடன்
பெற்றோர்கள் கிழக்கு கட்டிடத்தின் கீழே அமர்ந்தார்கள் . பள்ளியின் முதல்வர்  தேர்வு
அறைக்கு அருகில் அமரவேண்டாம் என்று சொல்லி  பள்ளியின்  விருந்தாளி அறையினை  திறந்து
விட்டார்கள். அதில் ஐந்து ஆறு நாற்காலிகள் மட்டும் இருந்தன . அவற்றில்
உட்கார்ந்தவர்கள் போக  எஞ்சியவர்கள்  அந்த அறையின் தரையில்  அமர்ந்து கொண்டார்கள்.
பலர் மேற்கு கட்டிடத்தின் கீழ் அமர்ந்து கொண்டார்கள். அறையில்  இருந்தவர்கள்
முதலில்  மின்விசிறியை  போட்டார்கள். பின் சிலர் இருந்த வாக்கில் தூங்க
ஆரம்பித்தார்கள். சிலர் செய்தி தாள் படித்தார்கள். இதுவே கொஞ்சம் அதிகமான செயல்
என்றால் . படித்தவர் போல் இருந்த ஒரு 30  வயது வாலிபர்  தனது செல் போனை
சார்ஜ் போட்டது தான். நம்ம ஆட்கள் இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்கள்
என்பது சரியாக இருக்கு. அடுத்தவர் பொருளை  உரிமையில்லாமல்  உபயோகிக்க கூடாது என
தெரியாத கல்வி  என்ன கல்வியோ.
குறிப்பு :  அந்த பள்ளியில் அறிவிப்பு பலகையில்    இந்த      2011  இல்
ஜூலையில்       ஐந்து  ஞாயிற்று கிழமைகள் வந்ததை பற்றியும்
அது  800 சொச்சம்  ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்  என்ற செய்தியையும்
வட்டத்தின் பரப்பளவை   tau  = இரண்டு 22/7
கொண்டு அளவிட வேண்டும்  எனும் செய்தியும்
தெரிவிக்கும் செய்தி தாள் நறுக்கு ஒட்டபட்டிருந்தது .
Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s