கனிமொழி

 

கனிமொழி உள்ளிட்ட எட்டு பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய தெரிவிக்கப்பட்ட காரணங்கள்

 

* சிபிஐ ஆட்சேபணை தெரிவிக்காதது, சட்டத்தின் பார்வையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், சட்டத்தின்படியும், வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் குறித்து தீர்மானிக்கமுடியும் .சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை என்பதால், ஆட்சேபணையில்லை என்ற சிபிஐ நிலைப்பாடு, சட்டத்தின் மீது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது .

* குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது ஊழியர்கள் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டு, கிரிமினல் செயல் புரிந்ததால், ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு சுமார் 7105 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளன. அதற்கு கைமாறாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம், 200 கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்துள்ளது .

*பெண்களைப் பொருத்தவரை, பொதுவாக அவர்கள் பலவீனமானவர்கள், சமுதாயம் அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பயன்படுத்திக் கொள்வதால், அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், கரிசனமான அணுகுமுறையும் காட்டப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதேபோல், ஒருவரை காவலில் வைத்திருப்பதால் அவரது உடல்நிலைக்கு ஆபத்து என்று கூறி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த சலுகைகள் கனிமொழிக்கும், கரிம் மொரானிக்கும் காட்டப்பட வேண்டுமா என்று கேட்டால், கண்டிப்பாக `இல்லை’

 

*கனிமொழியைப் பொருத்தவரை, சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்தவர் என்பதாலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும், அவர் பெண் என்பதால் எந்த வகையிலும் பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை

 

ஏற்கெனவே ஜாமீன் மனுக்கள் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அல்லது வெளியிலிருந்து வரும் செலுத்தப்படும் செல்வாக்கு உள்பட எந்தவித காரணங்களாலும் இந்த உத்தரவு வரவில்லை என்றும், முழுக்க முழுக்க சட்டத்தின் அடிப்படையிலும், நீதியை மனதில் கொண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

என்று நீதிபதி ஓ.பி. சைனி அறிவி்த்துள்ளார்.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s