எங்க வீட்டு அருகே மொத்தமாக   சமையல்  செய்து கொடுக்கும்  வீடு உள்ளது. அதில்  ஒரு வயதான பிராமன முதியவர்  ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர்க்கு சாப்பாடும் தங்க இடமும் அந்த வீட்டு மாடியில் உள்ள அறை தான் . கொஞ்சம் செல்வாக்குடன் உரிமையுடன் அந்த வீட்டில் வாழ்ந்த வந்தார் . சும்மா  இருக்கும்  பொழுது  எங்க வீடு பக்கம் வந்து பெண்களுடன் பேசி கொண்டு இருப்பார். அதில் இருந்து  அவர்க்கு  குடும்பம் உள்ளது என்றும். அவரது மனைவியுடன்  ஏற்பட்ட மனத்தாங்கலில்  வீட்டை விட்டு வந்து விட்டார்  என்றும் அவரது மகன்  மத்தய அரசு  பணியில் இருப்பதாகவும்  அவர்கள் தற்போது  தாம்பரம் அருகில் இருப்பதாகவும்  உறவினர்கள் திருச்சி  ஆந்திரா  போன்ற இடங்களில் இருப்பதாகவும் தெரிய வந்தது.  எல்லாரிடமும் நல்ல பழக குடியவர் . சிகரட்  குடிப்பார் மற்ற படி எனக்கு தெரிந்து எந்த கேட்ட பழக்கமும் கிடையாது. சமையல் செய்யும் வீட்டில் பல ஆண்டுகள்  இருக்கிறார் என்று கேள்வி

அப்படி பட்ட மனிதருக்கும்  அவர் வேலை பார்க்கும்  சமையல் வீட்டுக்கும் ஏதோ சின்ன மன பிரச்சனை , கோபித்து கொண்டு அந்த வீட்டை விட்டு வெளிய வந்து விட்டார். எங்க வீட்டில் கொஞ்ச நாள் தங்கினர். அடுத்த வீட்டில் கொஞ்ச நாள் தங்கினர். கடைசியில்  தங்க இடமில்லாமல்  ஒரு முதியவர் இல்லத்தில்  சேர்ந்து கணக்கு வழக்கு பார்த்து கொண்டு  இருந்தார்

. எங்க வீட்டில் கொஞ்ச நாள் தங்கினர். அடுத்த வீட்டில் கொஞ்ச நாள் தங்கினர். கடைசியில்  தங்க இடமில்லாமல்  ஒரு முதியவர் இல்லத்தில்  சேர்ந்து கணக்கு வழக்கு பார்த்து கொண்டு  இருந்தார் . அங்கே சிகரட்  பிடிக்க வழி  இல்லை என்று  அசாமில்  ஒரு  கோவிலில் பூஜாரி வேலைக்கு  சென்றார். அங்கு  எட்டு பத்து மாதங்கள் இருந்து விட்டு மீண்டும் சென்னை வந்து  சமையல் வேலை செய்தார். என் மனைவியை  வழியில்  கண்டால்  கொஞ்சம் பணம் வாங்கி கொள்வார்.  இப்படி அவரது காலம் ஆறு  மாதம் ஓடியது

இடையில் உடல் நலக்குறைவு வேறு  அவரை துன்புறுத்தியது.. ரொம்ப கஷ்டப்பட்டார். யாரவது  தன்னை அழைத்து வைத்து கொள்ள மாட்டர்களா என்று மனதில்  அவருக்கு ஒரு ஆசை உண்டு. அழைத்தால்  ஒட்டி கொள்வர்  என எல்லார்க்கும் பயம்

பெருங்களத்தூர்  அருகில் உள்ள ஊரில்  வாடகைக்கு குடி இருந்தார். யாரவது சமையல் வேலைக்கு கூப்பிட்டால்  போய் செய்து   கொடுத்து வந்தார்.  இடையில் வேலை இல்லாமல் போக    வாடகை கொடுக்க முடியாமல்  அந்த பகுதியின்  பேருந்து நிலையத்தில்  போய்  தங்கி யுள்ளார் .  அங்கயே  படுத்து கொண்டு  இருந்து வந்து உள்ளார்.கடந்த வாரத்தில் ஒரு நாள்  இரவு  பேருந்து நிலையத்தில்  படுத்த  உறங்கிய  நிலையில்  இறந்து விட்டார் போல . அந்த வழியாக  ரோந்து வந்த  காவல்துறையினர் முதியவர்  இறந்து கிடப்பதை அறிந்து தாம்பரம் பொது  மருத்துவமனையின்  பினகிடங்கில் கொண்டு சேர்த்து விட்டார்கள்விட்டார்கள் . இயற்கையான மரணம் என்றாலும் சந்தேகத்தின் பெயரில் உடற்கூறு  அறுவை செய்வார்கள் என்று தகவல் தெரிந்தவர்கள்  சொல்லுகிறார்கள், அவர் இறந்து விட்டதை அறிந்து  அவருடைய மகனுக்கு தெரிவித்தும்  எனக்கு அப்பாவே கிடையாது என அவரது  உடலை  வாங்க  மறுத்து விட்டார். தெரிந்தவர்கள்  போய் பார்க்கபோனால்  மருத்துவமனை உடலை  எடுத்து செல்லுங்கள் என வலியுறுத்துகி

தாம்பரம் பொது  மருத்துவமனையின்  பிணக்கிடங்கில் கொண்டு சேர்த்து விட்டார்கள் . இயற்கையான மரணம் என்றாலும் சந்தேகத்தின் பெயரில் உடற்கூறு  அறுவை செய்வார்கள் என்று தகவல் தெரிந்தவர்கள்  சொல்லுகிறார்கள், அவர் இறந்து விட்டதை அறிந்து  அவருடைய மகனுக்கு தெரிவித்தும்  எனக்கு அப்பாவே கிடையாது என அவரது  உடலை  வாங்க  மறுத்து விட்டார். தெரிந்தவர்கள்  போய் பார்க்கபோனால்  மருத்துவமனை உடலை  எடுத்து செல்லுங்கள் என வலியுறுத்துகிறது . காவல் துறையிடம்  போய்  உடலை எடுக்க காவல் துறையின் அனுமதி கேட்டால் சில வழிமுறைகள் உள்ளன  அது எல்லாம் முடிந்த பின் தான் தரப்படும்  என்கிறார்கள் . அவருடைய நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து  அவருடைய மகன் உடலை  வாங்க மறுப்பதால்  நாங்கள்  நல அடக்கம் செய்ய தயாராக  உள்ளளோம் என்று சொல்லி காவல் நிலையத்தில் காத்து கிடக்கிறார்கள் .  ஒருவர் இப்படி இறந்து போனால் என்ன  நடைமுறை கடை பிடிக்கப்பட்டு  முன்றாம் நபரிடம்  உடல் ஒப்படைக்கப்படும்  என்ற விபரம் யாருக்காவது தெரியுமா

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s