உயிருக்கு உயிரான நமது உறவுகளின் மரணம் பெரிய சோகமான நிகழ்வு ஆகும். அவர்களின் மரணம் நம்மை குறிப்பாக நமது இதயத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை பற்றி தற்போது ஆய்வு மேற்கொள்ளபட்டது .
சர்குலஷன் என்ற பத்திரிக்கையில் இதைப்பற்றி செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
உறவுகளின் மரணத்தை சந்திக்காதவர்களை விட உறவுகளின் மரணத்தை சந்தித்தவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உயிருக்கு உயிரானவர்களை இழந்தவர்களுக்கு மரணம் நிகழ்ந்த நாளைக்கு அடுத்த நாள் மாரடைப்பு வர இருபத்தி ஒரு மடங்கு வாய்ப்பு உள்ளது .அடுத்த ஒரு வாரத்துக்குள் மாரடைப்பு வர ஆறு மடங்கு வாய்ப்பு உள்ளது. ஒரு மாதத்துக்கு பின் ஓரளவு அந்த துயரத்தில் இருந்து மீள வாய்ப்பு உள்ளது.எனவே மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைய தொடங்குகிறது.

உயிருக்கு உயிரானவர்களை இழந்த சோகம் நமது மூளையையும் உடலையும் பெரிதும் பாதிக்கிறது . இரத்த நாளங்களில் உள்ள ரசயானத்தை மாற்றி இரத்தத்தை உறைய வைத்து இரத்த ஓட்டத்தின் அழுத்தத்தை மாற்றி விடுகிறது. இதனால் ஏற்படும் அழுத்த மாற்றத்தால் மாரடைப்பு வருகிறது . மேலும் சோகத்தால் நமது அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுகிறது உ.ம்
சாப்பிட வேண்டிய மருந்துகளை எடுக்காமல் இருப்பது . சாப்பிடாமல் இருப்பது, போன்றவை .Mostofsky என்ற ஆராய்ச்சியாளர் சமூகமும் மருத்துவர்களும் எப்படி உயிருக்கு உயிரானவர்களை இழந்தவர்களின் இதயத்தை பாதிக்கும் சோகத்தில் இருந்து மீட்பது என்பதை பற்றி ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளார் .
அந்த காலத்திலேயே இதை எல்லாம் தெரிந்த நமது முன்னோர்கள் இறந்த வீட்டில் பதினாறு நாட்கள் உறவுகள் இருந்து விசேஷம் வாய்த்த பின்பு தங்களது அன்றாட வேலைக்கு திரும்ப வைக்கும் நடைமுறையை வைத்து இருந்தார்கள் . தற்போது இந்த அவசர உலகத்தில் .. உயிருக்கு உயிரானவர்களை இழந்தவர்களின் இதயத்தை உடல்நலத்தை பற்றி கவலை இல்லாமல் ஐந்தாம் நாளே விஷேசம் வைத்து எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க திரும்பி விடுகிறோம். நமது முன்னோர்கள் அறிவாளிகள் என்பதை அமெரிகாரன் வந்து சொன்னாதான் நாம் நம்புவோம் . கூடுதல் விபரங்களுக்கு http://healthland.time.com/2012/01/10/how-grief-can-break-your-heart/?iid=hl-main-lede

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s