நேற்று the mirror (ayneh) எனும் படம் பார்த்தேன் . பெர்சியன் படம். ரொம்ப நல்ல படம்.
கதை என்று பிரமாண்டமாக எதுவும் இல்லை. இப்படி எல்லாம் நம் மொழியில் படம் எடுக்க மாட்டேன் என்கிறார்களே என்று ஏங்க வைக்கிறது. டேஹ்ரன் நகர பெரும் முக்கியமான சாலையில் ஒரு ஆரம்ப பாடசாலை உள்ளது. பள்ளி முடிந்து பிள்ளைகள் விட்டுக்கு திரும்பி செல்லுகின்றனர்.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் மட்டும் தனித்து நிற்கிறார்கள். ஒரு சிறுமியின் அப்பா காரில் வந்து விட அவளும் விடை பெற்று சென்று விடுகிறாள். ஒரே ஓர் சிறுமி மட்டும் நிற்கிறாள் . வழக்கமாக அவங்க அம்மா வந்து அழைத்து செல்வார்கள் . வெகு நேரமாகியும் அவங்க அம்மா வரவில்லை. அம்மாவுக்கு போன் பண்ண வேண்டும் என்றால் சாலை கடந்து செல்லவேண்டும் . நகரே பெர்சியவுக்கும் கொரியாவுக்கும் நடக்கும் கால்பந்து போட்டியை பற்றி பேசிய படி இருக்கிறது. சாலையை கடக்க எத்தனித்து இயலாமல் சாலையை கடக்கும் ஒரு பெரியவரின் சட்டையை பிடித்து கொண்டு சாலை கடந்து போன் பூத்தை அடைந்து காசை உயரமாக இருக்கும் பூத்தின் ஓட்டையில் போட முடியாமல் பக்கவாட்டு சட்டத்தில் ஏறி போட்டு போன் செய்கிறாள். ஆனால் யாரு எடுக்க வில்லை.

மீண்டும் சாலை கடந்து ஸ்கூல் காம்பௌண்ட்க்கு வர முயற்சி செய்கிறாள் . கார்கள் விரைந்து செல்வதால் அவளால் இயலவில்லை. ஒரு பெரியவர் பின்னால் பிடித்து கொண்டே சாலையை கடக்கும் போது பெரியவர் கார்கள் விரைந்து செல்வதை கண்டு கடக்காமல் நடுவழியில் திரும்புகிறார். அந்த சிறுமி திரும்பிய பெரியவர் பின் போவதா சாலையை கடப்பதா என்று தவிக்கிறாள் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு ஓடி சாலையை கடக்கிறாள் .
திரும்பவும் பள்ளியின் காம்பௌண்டுக்கு வெளிய நின்று தன் தாய் வருகிறாளா என்று பார்க்கிறாள். நேரம் ஆகி கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூடம் பக்கம் திரும்பி தன் ஆசிரியரிடம் தனது அம்மா வராதது பற்றி தெரிவிக்கிறாள் . அந்த ஆசிரியை தனது உறவினரிடம் பக்கத்து பேருந்துநிறுத்தத்தில் அந்த சிறுமியை கொண்டு விட சொல்லுகிறார்,. அவரின் ஸ்கூட்டரில் ஏறி அந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கொள்ளுகிறாள் . ஒரு பேருந்தில் ஏறி பயணிக்கிறாள் .

அவளுக்கு அவள் விட்டின் முகவரி தெரியாது. எந்த பேருந்தில் செல்ல வேண்டும் என்றும் தெரியாது . ஆனால் ஒரு பெரிய பஸ்சில் செல்லவேண்டும் , தான் இறங்கும் இடத்தில் நீருற்று இருக்கும் இதய வடிவத்தில் வளைவு ஓன்று இருக்கும் என்பது தெரியும். அப்பா பெயர் தெரியும் அப்பாவின் வாகன கலர் தெரியும் அப்பா மருந்து சம்மந்த தொழில் செய்கிறார் என்று தெரியும் அம்மாவுக்கு தம்பி பாப்பா பிறக்க போவது தெரியும் . இதை வைத்து கொண்டு அந்த சிறுமி தனது வீட்டை கண்டு பிடித்து செல்லுகிராளா என்பது தான் கதை.

படம் நம்மை ஆரம்ப காட்சியிலிருந்து அந்த பெண் எப்படியாவது வீட்டிருக்கு பத்திரமாக சென்று விட வேண்டும் எனும் எண்ணத்தை உருவாக்கி அந்த சிறுமியுடன் நம்மையும் இழுத்து கொண்டு செல்லுகிறது யாராவது அந்த சிறுமிக்கு தெரிந்தவர்கள் அவள் செல்லும் வழியில் வந்து விட மாட்டார்களா எனும் நப்பாசையை நமக்கு ஏற்படுத்துகிறது.

அந்த சிறுமி கஷ்டப்பட்டு பஸ் ஏறி இறங்கும் போது பக்கத்தில் இருந்து நாம் ஏற்றி விடக்கூடாதா என்ற எண்ணம் வந்து விடுகிறது. படம் நம்மை பதபதைக்கவைத்து கொண்டே செல்லுகிறது. வாகனங்களுக்கு இடையே அவள் கேமிராவின் கண்ணில் படாமல் செல்லும் போது நம்மை பேருந்துகளுக்கு இடையே எட்டி பார்க்க வைக்கிறது .அந்த சிறுமியுடன் டேஹ்ரன் சாலைகளில் ஒரு அச்சத்துடன் போக்குவரத்துகளுக்கிடையே வளைந்து நெளிந்து நாமும் பயணிக்கிறோம் . best film one must see.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

4 responses »

  1. sivakumar சொல்கிறார்:

    ippava intha padathai parkavendum aaval etpadukuruthu.

  2. Rajkumar சொல்கிறார்:

    நீங்கள் கதை சொல்லிய விதம் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியது !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s