கரீம்  ostrich  கோழி  பண்ணையில்  அந்த கோழிகளை பராமரிப்பவராக  வேலை செய்கிறார்,அவரது குடும்பம்  அவரது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள்  ஒரு பையன் கொண்ட குடும்பம். நம்ம தமிழ்நாட்டு கிராமம் மாதிரியான  ஒரு சின்ன கிராமத்தில் இருப்பதை வைத்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

   கரிமின்  பெரிய பெண்ணின்  காது  கேட்கும் கருவி  அவங்க வயலில் உள்ள பாழடைந்த கிணற்றில் விழுந்து விடுகிறது.  அதை  அவருடைய பையன் தனது நண்பர்களுடன் சேர்ந்தது  சகதியும்  குப்பையுமான  கிணற்று தண்ணீரில் தேடுகிறான் . கரீம் வந்து  பசங்களை  தீட்டு  கிறார். அப்ப அவருடைய பையன்  அந்த கிணற்றில் அலங்கார  மீன்கலை  வளர்க்க போவதாகவும்  அந்த மீன்களை விற்று  பெரிய பணக்காரன்  ஆக போவதாக  சொல்லுகிறான் . கரீம்  அசுத்தமான சகதியில் மீன்  வளராது .  பசங்களை கூட்டிகிட்டு  இந்த வேலை எல்லாம்  செய்யக்கூடாது  என்று தீட்டு கிறார்,. தனது வாழ்க்கையை ரொம்ப கண்ணியமாக நடத்தி வருகிறார்.
       ஒரு நாள்   பண்ணைக்கு புதிதாக நெருப்பு கோழி  கொண்டு வரப்பட்டு கின்றன . அவற்றை  கண்களை துணி கொண்டு மூடி   அழைத்து வருகிறார்கள். பட்டியில் அடைத்த பின்  துணியை  எடுக்க வேண்டும் . துணியை எடுப்பதில் ஒரு வேலையாள் தவறு செய்து விட  ஒரு நெருப்பு கோழி தப்பித்து  விடுகிறது.  அதன் துரத்தி சென்றும்   காடு மலை அலைந்து கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால்  கரிமின் வேலை போய்விடுகிறது.

வேலை போனதால்  என்ன செய்வது  என்று  கஷ்டபடுகிறான்   .  பையன்கள்  கூட்டாக சேர்ந்து கிணற்றை  தூர் வாரி  விடுகிறார்கள் . கிணற்றில்  நல்ல நீர்  நிரம்பி விடுகிறது .   அதன் கரையில்  ஒரு குருவி  கூடுகட்டி  குஞ்சு பொரித்து  கீச் கீச் என சத்தம்  எழுப்பி கொண்டு இருக்கிறது . இது தெரியாது  பையன்களை  துரத்தும்  கரீம்  கிணற்றில் தண்ணீர் நிரம்பி  இருப்பதை பார்த்து   சமாதனம் அடைகிறார்.   தூர் வாரிய சகதியில்  காத்து கேட்கும் கருவியை கண்டு பிடிக்கிறார்;  ஆனால்  அது  வேலை செய்யவில்லை  தனது  மகளுக்கு தேர்வு இருப்பதால்  காது கேட்கும் கருவியை உடன்   சரி செய்ய வேண்டிய நிலையில்  டேஹெரன்  க்கு தனது  இரு சக்கர வாகனத்தில்  வந்து  சரி செய்யும் கடைக்கு செல்லுகிறான். சரி செய்ய அதிகம்  ஆகும் என்று சொல்லிவிடுவதால் என்ன செய்வது என்று  அவனது  பைக்கில்  நின்று கொண்டு  யோசிக்கும் போது, அவன் பைக்கில் ஒருவர் ஏறி கொண்டு  இன்னொரு இடத்துக்கு அவரசரமாக செல்ல வேண்டும்  என்றும்  பணம் தருவதாகவும்   சொல்லுகிறார் .   அப்படியே கரீம் வாடகை பைக்கு ஓட்டும் நபராக மாறுகிறார்,  கொஞ்சம் கொஞ்சமாக நகரின்  வாசம்  அவருடன்  சேர கரீம்  சுய நலமானவராக மாறுகிறான்.  ஒரு விபத்தில்   கரிமின் கால் உடைந்து விடுகிறது. அவனது குடும்பம் மேலும் வறுமையில்  தள்ளப்பட்டு கஷ்படுகிறது.
இதில் இருந்து  எப்படி  மீள்கிறார்கள்,  அவருடைய பையனின் மீன் வளர்க்கும் ஆசை நிறைவேறியதா   என்பது மீதி  கதை .
ஒருவன்  செல்வந்தனாக  இருக்கும்  போது  நல்ல தனமாக  நடப்பது பெரிதில்லை. வறுமையிலும்  நல்லதனமாக நடந்து கொள்ளுவது  தான் பெரிய விஷயம் என்பதை  படம் அழகா  எடுத்து சொல்லுகிறது.

 

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s