http://www.facebook.com/photo.php?fbid=155916797884395&set=a.105397506269658.7551.100003982270257&type=1&theater

ரூ1000 கோடி முதலீட்டில் தொழில் தொடங்கினால் உடனே உங்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் அரசு செய்து தரும் ஆமாம். National Investment Board அமைப்பு எல்லா மாமா வேலை பார்த்துவிடு;

சுற்று சூழல் கிளியரன்ஸ் தேவையில்லை
மக்கள் கருத்து கேட்க தேவையில்லை
மொத்தத்தில் எந்த மயிரு நிபந்தனையும் கிடையாது

“அப்படியே சாப்பிடலாம் இந்தியாவை”

 

இன்று 11.10.12 பெண் குழந்தைகள் தினம் . கொண்டாட வேண்டும் தான். ஆனால் கடந்த 2011 -ம் ஆண்டு 30 லட்சம் பெண் குழந்தைகளை கருவில் கொன்ற நாட்டு குடிமக்கள் நாம் எனவே நமக்கு என்ன யோக்கியதை இருக்கு கொண்டாட . அதனால் பொத்திகிட்டு இருக்கலாம்

 

சின்ன வயசில் 11 மணி பக்கம் வயிறு பசிக்கிற மாதிரி இருக்கும் வேற ஒன்னுமில்ல குழம்பு கொதிக்கிற வாசனை வரும். அப்ப எங்க அம்மாவிடம் பழைய சாதத்தை வைக்க சொல்லி அந்த கொதி குழம்பை ( தாளிக்காத கொதித்து கொண்டிருக்கும் குழம்பு) ஊற்றி சாப்பிடுவேன் …. க்காளி அந்த டேஸ்ட் 5 நட்சத்திர உணவகத்திலும் கிடைக்காது. ம் ம் ம் ம் ம் ம் ம் ம்ம்ம் 

#அன்னையுடன் அறுசுவை போம்

பெற்ற குழந்தையின் வருங்காலம் பற்றி முடிவெடுக்கும் உரிமை அப்பா அம்மா இருவருக்கும் உண்டு. தவறான முடிவுகளை தட்டி கேட்க அரசுக்கு உரிமை உண்டு.

பெற்ற தாயின் விருப்பத்திற்கு மாறாக அந்த தாய் பெற்ற குழந்தையை தத்து கொடுத்ததும் இல்லாமல் அது 

தொடர்பாக சண்டையிட்ட தனது கற்ப்பினி மனைவியை தொடர்வண்டியிலிருந்து தள்ளீயது அதீத ஆணாதிக்க மனப்பாண்மை. 

வழக்கு பதிவு செய்யாத கேரள காவல் துறையின் செயல் கண்டிக்கத்தக்கது.

அந்த பெண் மரணம் அடைந்து விட்டார் இந்த கொலைக்கு காரனமான அவரது கணவரை எமனுக்கு தத்து கொடுத்து விடலாம்

 
 
நமது நாட்டில் சட்டபூர்வ அனுமதியில்லாமல்( illegal trial) சோதனைக்குட்படுத்தப்படாத மருந்துகளை(untested medicine) மனித நோயாளிகளுக்கு கொடுத்து மருந்தின் சக்தியை அறிய பரிசோதனைகள் பல மருத்துவமனைகளில் செய்யப்படுகின்றன.

இதனை அடுத்து உச்ச நதிமன்ற வழக்கொன்றில் இது பற்றிய தகவல்களை கோரியுள்ளது. மத்திய அரசு வக்கில் மாநில அரசின் மீதும் மாநில அரசு வக்கில் மத்தியஅரசின் மீது குறை சொல்லுகிறார்கள். 

இவர்கள் இப்ப சோதனை சாவடி எலிகளாக மனிதர்களை சகஜமாக பயன் படுத்த ஆரம்பித்து வி ட்டார்கள். இந்தியாவில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை.
 
சாதி நாட்டாமை தலைவர் ஒருவர் சொல்லுகிறார்.
“‘ தற்போது நடக்கும் கற்பழிப்பு நிகழ்வுகளுக்கு காரணம் திருமணம் குறைந்த பட்ச வயது வரம்பெனவும் எனவே அந்த வயது குறைந்தபட்ச வரம்பை எடுத்துவிட்டால் பிள்ளைகள் எந்த வயதில் வயதுக்கு வருகிறார்களே அப்போதே அவர்களது காமம் தீர்க்கபடுவதால் கற்பழிப்பு இருக்காது” 
குறைந்தபட்ச வயசு வரையறை செய்த அரசு இத்தனை வயதுக்குள் (உச்ச வரம்பு) திருமண செய்து கொடுக்காத பெற்றோருக்கு தண்டனை என சட்டம் கொண்டு வரலாம். கற்பழிப்பு கொஞ்சம் குறையும். ?

ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டங்களில் பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அதிக பணம் ஈட்ட ஆசைபடுவோர்களுக்கு ஒர் நற்செய்தி

Cupriavidus metalliduran எனும் பாக்டீரியா gold chloride, எனும் நச்சு பொருளில் நன்றாக வளர்ந்து 24 காரட் த

ங்கத்தை உருவாக்கிறது

எங்கள் மீது நம்பிக்கையில்லை என்றால் இந்த வலைஇணைப்புக்கு செல்லுங்கள்
http://www.washingtonpost.com/blogs/innovations/post/a-bacteria-that-poops-gold-yep-that-exists-and-its-in-an-art-exhibit-video/2012/10/04/1617f178-0e5d-11e2-bd1a-b868e65d57eb_blog.html

 

மேற்படி கப்ரியாவிடஸ் மெட்டாலிடுரன் பாக்டீரியா 5 கிராம் ரூ. 1000 க்கு கிடைக்கும் உடனே வாங்கி தங்கத்தை வீட்டில் தயாரித்து கோடீஸ்வரன் ஆகுங்கள்

கிடைக்குமிடம்

விஞ்ஞானி .ஈமூன்
போராசைக்காரன் தெரு
பெருந்துறை
ஈரோடு மாவட்டம்
நைஜிரியா

அனைத்திந்திய கட்சிகள் என்று மார்தட்டி கொள்ளும் கட்சிகள் காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட் போன்றவைகள் காவிரி பிரச்சனையில் பொதுவான கருத்து தெரிவிக்காமல் அந்தந்த கடசியின் மாநில தலைவர்களை வைத்து இரண்டுவிதமாக அறிக்கைவிடுவது “மோசமான வேசித்தனம்

.”

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் விடுவது ஏதோ பிச்சை போடுவது அதாவது தங்களுக்கு போக மிச்சமிருந்தால் என்பது நியாயமான எண்ணம் இல்லை என்பதை படித்த உலகச்சட்டம் தெரிந்த கட்சிகளின் தலைவர்கள் ” எப்படி உற்பத்தி மாநிலத்திற்கு உரிமை இருக்கோ அதைபோல் கடைமடை மாநிலத்திற்கும் உரிமை இருக்கிறது” என்பதை போதிக்காமல் சாதாரண கன்னட வேதிகாக்களை போராட விட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதற்கல்ல.

பின்ன மக்கள் இலக்கிய கழகத்தார் சொல்வது போல் நீங்கள் ஓட்டு பொறுக்கிகள் தா

 
சனி ஞாயிறுகளில் எங்க வீட்டு எஜமானியம்மா உங்களுக்கு லிவு இரண்டு நாட்கள் இருக்கு எனக்கு என்றைக்கு தான் விடுமுறை கிடைக்குமோ என்று எப்போதாவது சலித்து கொள்வது உண்டு. 

சரி உணவகம் சென்று சாப்பிட்டு வந்தால் நல்லவா இருக்கு இதற்கு வீட்ட

ில் செய்து சாப்பிட்டு இருக்கலாம் என்பாங்க 

சரி அவங்க அம்மா வீட்டில் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு என அழைத்து சென்றால் அங்கே சும்மா இரு என சொன்னாலும் எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்வாங்க

 
 
களுக்கு” வரும் ஆன வராது மாதிரி” “விடுப்பு வேணும் ஆனா வேண்டாம்”

 —

 
விளையாட்டுக்கு காந்தி கணக்கில் வைத்து கொள் என்று சொல்லுவோம்.

காந்தி கணக்கு என ஏன் சொல்லப்படுகிறது;

சொல்லுங்க அண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியில்
அண்ணாச்சி சொன்னது

தண்டி உப்பு சத்தியாகிரகம் நடந்த போது அதற்கு வியாபாரிகளை நிதி உதவி செய்ய காந்திஜி கேட்டுக் கொண்டதாகவும் வெள்ளை அரசுக்கு பயப்பட்ட வியாபாரிகள் தாங்கள் நேரடியாக நன்கொடை வழங்க இயலாது. சத்தியாகிரக யாத்திரை செல்லும் போது காந்திஜி அன்னாரது தொண்டர்களை அனுப்பி ” காந்தி கணக்கு” என்று சொன்னால் தாங்கள் ( வியாபாரிகள்) நன்கொடை வழங்கி விடுகிறோம் என சொன்னார்களாம். அதனால் காந்தி கணக்கு என்று சொல்லுகிறார்கள் என்றார்

#காந்தி பேரை சொல்லி வாங்கிய நன்கொடையை எவன் அவர் பெயரை சொல்லி சூட்டிருப்பான் அதனால் வந்திருக்கும் #

 
 
காமராஜ் அவருடைய நண்பரின் மகன் சொன்ன விஷயம். 

காமராஜ் அவர்களும் அவரது நண்பரும் நிலக்கரியால் இயங்கும் பரமக்குடி – விருதுநகர் பேருந்தில் கரி அள்ளி போடும் வேலையை அந்த காலத்தில் செய்து வந்தார்கள் என்ற செய்தி பெரும் வியப்பாக இருந்தது.

 

பின்னர் காமராஜ் அவர்கள் காங்கிரஸில் சேர்ந்து பெரும்தலைவராய் மாறிய காலத்தில் அவருடைய நண்பர் கீழே விழுந்து கால் உடைந்து உடல் நலமில்லாமல் இருந்தாராம் அப்போது காமராஜ் அவர்கள் அவரது நண்பரை வந்து குசலம் விசாரிக்க வில்லை என ரொம்ப விசனத்தில் இருந்தாராம். 

ஒரு நாள் காமராஜ் அவரின் நலம் விசாரிக்க வந்த போது நண்பர் அவரிடம் முகம்கொடுத்து பேசவில்லை. அப்பொழுது காமராஜ் அவரது மனைவியிடம் “என்னங்க இவன் கீழே விழுந்ததற்கே இப்படி யிருக்கானே. வெள்ளைகாரன் என்னை சாக்கடையில் போட்டு மிதித்து மிதித்து அடித்தான் அதற்கெல்லாம் நான் கலங்கிய போனேன்”. என்று சொல்லி நண்பரை சமாதானபடுத்தி வந்தாராம்.

‘சும்மா வரவில்லை விடுதலை”காமராஜை நினைவு கூறுவோம்

 

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

பின்னூட்டமொன்றை இடுக