வலைப்பூக்கள் பற்றி அறிமுகம் இருந்தாலும்  எழுதுவதில்லை அவ்வளவாக அக்கறையில்லாமல்  தான் இருந்தேன்.  2005 ஆம் ஆண்டு வாக்கில் தான்  என நினைக்கிறேன. ஒரு நாள் தேடு பொறியில் “தமிழ்” என தட்டி தேட சொன்ன  போது  அது  பல கோடிஎண்ணிக்கையிலான வலைத்தளங்கள் பக்கங்கள் பூக்கள்  என காண்பித்தது.   அடுத்து ஆங்கிலம்  என் தட்டினால்  ஏகப்பட்ட கோடிகளை காட்ட   இந்தி  என  தட்டச்சு செய்து தேடிய போது தமிழைவிட   இரண்டு மடஙகு வலை எண்ணிக்கையினை காட்ட  பொறமை மனதில் ஏற்பட்டது.   .இந்தியைவிட தமிழ் தாழ்ந்தா போவது எனும் எண்ணத்தில்   தமிழின் எண்ணிக்கையினை கூட்ட என்ன செய்யலாம் என யோசித்து   நாம் வலைதளங்களை  உருவாக்க வழியில்லை என்றாலும் வலைப்பூக்களையாவது உருவாக்கி எண்ணிக்கையினை கூட்டலாம்  என ஆரம்பித்து      “அன்புடன்” வலைக்குழுமத்தில்   இனைந்தேன்   . அதில் இதே மாதிரி ஒரு தசரா காலத்தில்  குலசேகரபட்டண தசராவிற்கும்   மணப்பாடுக்கும் சென்று வந்ததை எழுதினேன்.   உறுப்பினர்கள் ஆறுதலுக்காக பின்னோட்டம் எழுத  ஏதோ பெரிய எழுத்தாளன் எனும் நினைப்பு வந்து  என் மனதில் வந்து உட்கார ஆரம்பித்தது. தேடு பொறியில் என் பெயரை அடிக்க     என் பெயரும் எனது இடுகை  தெரிய   பிரமித்து நிறைய பக்கங்கள் என் பெயருக்கு எதிராக வரவேண்டுமென  தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன் . கவிதையென நான் எழுதியவைகளை   அன்புடன் குழும நண்பர்கள்   புகாரி ,புதியவன் , பாஸ்கர், சீனா,  சாந்தி ,பூங்குழலி,  மரியா , ரிஷான் , சக்தி சக்திதாசன் போன்றவர்கள் பாராட்ட    மனது லேசாக  பறக்க ஆரம்பித்தது(பெயர் விடுபட்டவர்கள் தயவுசெய்து மன்னிக்கவும்).  உயிர்மையில் நான் எழுதிய முதல் முத்தம் எனும் கவிதை வர உண்மையில்  எனக்கு பெருமையாக இருந்தது. பின்”பொன்னம்மா “என்று கதையும்   சில கட்டுரைகளும் உயி்ர்மையில் வர நான் என்னையே பெருமையாக பார்த்து கொண்டேன் திண்ணை , வார்ப்பு  போன்றவைகளில் தொடர்ந்து  நான் எழுதிய கவிதைகள் வர மனசு  மகிழ்ச்சியில் முழ்கியது.  நான் எழுதிய கவிதைகளை  மற்றவர்கள் தங்களது வலைப்பூக்களில் எடுதது   மறுஇடுகை செய்த போது   பெருமையாக இருந்தது. நான் தானே எழுதிய கதையென வெளியிட்ட போது முதலில் கோபம் வந்தாலும் பின்னால்  வலைத்தளங்களில் இதெல்லாம் சகஜம் என சும்மா இருந்துவிட்டேன்.   தற்போது  manimalar.wordpress.com எனும்  எனது வலைப்பூ 42000  hits கொடுத்து உள்ளது சற்று பெருமையாக இருந்தாலும்  மற்றவர்களின்  வலைப்பூக்களை  ஒப்பிடும் போது எவ்வளவோ பின்  தங்கி உள்ளது   தெரிகிறது. ஏதோ விளையாட்டாக எழுத ஆரம்பித்து  அதுவே   மனதிருப்தி அளிப்பதாக உள்ளது.  அதே நேரத்தில் எந்த காலத்திலும்  கணினிக்கு  அடிக்ட் ஆகி விடக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக எச்சரிக்கையா  இருந்து வருகிறேன்.  புகைப்படங்களில் நமது முகத்தை முதலில் பார்ப்பது போல்   கணினியில் நமது பெயர்  புகைப்படம் வரவேண்டுமெனும்  ஆவலில  எழுதுவதாக மனம் சில சமயம்  சுட்டிகாட்டினாலும்  ஒரு மனது இல்லை நன்றாகதான எழுதுகிறாய் என அசட்டு  தைரியம் தர எழுதுகிறேன் எது எப்படி இருந்தாலும்  நல்ல நண்பர்களையும்  நிறைய விஷயங்களையும்  முக்கியமாக மனதில் நமக்கு பிடித்ததை செய்கிறோம் என்ற ஆத்ம திருப்தியும்  எழுதுவதால் வருகிறது என்பதை மறுக்கவியலாது.  என்னை எழுத தூண்டிய இதயங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.  என்றாவது  எழுத்துலகை  வெல்வேன் என நம்பிக்கையுடன்

வே.பிச்சுமணி

Advertisements

2 responses »

  1. karthik சொல்கிறார்:

    வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s