இசக்கி கதை


தமிழகத்தில் நீலிகதைகள் கதைகள் வழிவழியாக சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருகின்றன.யட்சி இசக்கி கதைகள் சொல்லப்படுவது உண்டு. நெல்லை மாவட்டம் குமரி மாவட்டங்களில் இசக்கி அம்மன் கோயில்கள் ஏராளம்.நெல்லை மாவட்டத்தைவிட குமரி மாவட்டத்தில் இசக்கி அம்மன் கோயில்கள் அதிகம்.நெல்லை குமரி சாலையில் முப்பந்தல் இசக்கிக்கு விவரம் தெரிந்த ஓட்டுநர்கள் காணிக்கை அளிக்காமல் செல்வதில்லை. நெல்லை குறுக்குத்துறையிலிருந்து டவுணுக்கு செல்லும் சாலையில் சாலை இசக்கி கோயில்உண்டு. அந்த கோயிலை தாண்டும் பொழுது பயந்துவிட்டால் இசக்கி நம்மை பிடித்து கொள்வாள் என்று எங்கஅம்மா சின்னவயதில் சொல்லுவார்கள் அதனால் மெயின் ரோடுவழியாக தான் எம்சிஆர் படத்தை லெட்சுமி தியெட்டரில் பார்க்க செல்வோம். இப்படி இச்க்கிதெய்வத்தை பேசி கொண்டிருந்த பொழுது. எனது நண்பர் குமரிக்காரர் தன்பாட்டியின் கதையை கூறினார்.அந்த கதை…. மாதவம்மா ஒரு நாள் ஊருக்கு வெளியே இருந்த இசக்கி அம்மன் கோயில் முன்னால் காலை நீட்டிக்கொண்ட தென்னை ஓலையை கிழித்து கொண்டிருந்திருந்தா அப்ப அந்த வழியாக வந்த அதே ஊரை சார்ந்த மாயம்மா ‘ எக்கா இசக்கி எதிர்த்தப்பில காலை நீட்டிட்டு இருக்கியே காலை சரியா வையின்னு சொலல. ” தன் கணவர் சாமி கொண்டாடி என்ற தைரியததில் “”ஆமா உன் இசக்கி என்னை புடுங்கிடுவா “என பதில் சொன்னாள் மாதவ ம்மமா தென்ன குச்சிகளை அடுக்கி பெருக்கமாறுகளை செஞ்சி அவைகளை கட்டி கொண்டு மாதவம்மா தன் வீட்டுக்கு வந்து மார்களை வைத்து விட்டு அடுக்களை பக்கம் போனவா வயிற்றில் லேசா வலி ஆரம்பிக்க வயிற்றை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டாள் . வயிற்று வலி அதிகமாக வலி அவளை பிடுங்க ஆரம்பித்துவிட்டது. தன்னுடைய வயிற்றுவலிக்கு இசக்கி அம்மாள எடுத்தெறிந்து பேசியது தான் காரணம் என மனசுக்குள் பயம் வர ஆரம்பித்தது. தனது ஆம்பளை வரும் வரை பல்லை கடித்து கொண்டு இருக்க வேண்டியது தான் என படுத்து வலியால் முணங்கி கொண்டு இருந்தார். வேலைகள் சுளவில முடிய வெள்ளண வீட்டுக்கு நுழைந்த மாதவம்மாவின் கணவர் வீ்ட்டில் காலடி வைத்ததும் உள்ளே இசக்கி வந்திருப்பதை உணர்ந்தார். வீட்டிற்குள் கால்களை கழுவி விட்டு உள்ளே நுழைந்து “இசக்கி நீ வந்திருக்கிறது எனக்கு தெரியும் இங்க பிள்ளைகுட்டிகள் பெண்கள் புழங்கிற வீடு நீ இருந்துக்கோ ஆனால் அவளை தவிர யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது” எனச் சொல்லி இசக்கிபார்த்த இடத்தில் விளக்கேற்றி சாமி கும்பிட்டடார் இரண்டு நாள் கழிஞ்சி அந்த பக்கம் வந்த மாயம்மா மாதவம்மா தெருவழியா போகையில யாரோ சொல்ல கேள்விபட்டு “நடந்ததை சொல்லி அந்த இசக்கி மாதம்மாவோடு வீட்டுக்கு வந்திட்டா போல” அந்த குடும்பத்திற்கு கூட கொஞ்ச கிலியை ஏற்படுத்தி சென்றாள். இசக்கி கதையா நம்புவது நம்பாம இருப்பதா என குடும்பத்தார் திகைத்து கொண்டு இருந்தார்கள். ஒரு நாள் மத்தியானம் அடுத்ததெருவுக்கு செல்ல மாதவம்மா வீட்டு சந்து வழியாக செல்ல வந்த பேய் பிடித்த லட்சுமி மாதவம்மா வீட்டு வாசலில் நுழையும் போது “அய்யோ இசக்கி இங்கே இருக்காலே” என ஓடினாள் முன்னால போகும் பொழுது “அய்யோ இந்த பக்கம் நீலி பார்த்துட்டு ” இருக்கா நான் எப்படி போவேன் என்று சொல்லிய வண்ணம் வந்தவழியே ஓடும் பொழுது அவர்களால் நம்பா இசக்கி தங்கள வீட்டில இருக்கிறதை நம்பாம இருக்கமுடியல. அதற்கப்பறம் ஒவ்வொரு நாளும் கிழமையிலும் இசக்கிக்கு படையல் போட்டு கும்பிட்டு வந்தார்கள் மாதவம்மா வயசாகி இறக்கும் வரை மாதம்மாக்குஅந்த வயிற்றுவலி போகல. மாதவம்மா இறக்கும் பொழுது ஓ வேன அலறி இறந்தாள் . அப்ப எல்லாரும் இசக்கியும் அவளோடு வெளியேறிவிட்டாள் என நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

Advertisements

rural development department appreviation


2 NGP NIRMAL GRAM PURASKAR
3 GP GRAM PANCHAYAT
4 ER ELECTED REPRESENTATIVE
5 PCSC PANCHAYAT CENTRAL STEERING COMMITTEE
6 PCEC PANCHAYAT CENTRAL EXECUTIVE COMMITTEE
7 PSSC PANCHAYAT STATE STEERING COMMITTEE
8 SPRC STATE  PANCHAYAT RESOURCE CENTRE
9 DPRC DISTRICT PANCHAYAT RESOURCE CENTRE
10 PES PANCHAYAT ENTERPRISE SUIT
11 PMU PANCHAYAT MANAGEMENT UNIT
12 RGSY RASTRIYA GRAM SWARAJ YOJANA
13 PIP PARTICIPATORY INDENTIFICATION OF POOR
14 SOP STANDARD OPERATING PROCEDURE
15 SSMS STATE SUPPLY AND MARKETING SOCIETY
16 SMMU STATE MISSION MANAGEMENT UNIT
17 MIS MANAGEMENT INFORMATION SYSTEM
18 PMEYSA PANCHAYAT MAHILA EVAN YUVA SAKTHI ABIYAN
19 EWR ELECTED WOMEN REPRESENTATIVE
20 BRGF BACKWARD REGION GRANT FUND
21 THAI TAMILNADU VILLAGE HABITATION IMPROVEMENT
22 CMSPGHS CHIEF MINISTER SOLOR POWERED GREEN HOUSE SCHEME
23 PEAIS PANCHAYAT EMPOWERMENT AND ACCOUNTABILITY
24 PESA PANCHAYAT(EXTENSION TO SCHEDULED AREA) ACT 1996
25 CSIDS COMPREHENSIVE SCHOOL INFRASTRUCTURE DEVELOPMENT SCHEME
26 IEC INFORMATION EDUCATION AND  COMMUNICATION
27 RIS RURAL INFRASTRUCTURE SCHEME
28 RBMRS RURAL BUILDING MAINTENACE AND RENOVATION SCHEME
29 TSC TOTAL SANITATION CAMPAIGN
30 CBO COMMUNITY BASED ORGANISATION
31 RSOR RURAL SCHEDULE OF RATE
32 IHHL INDIVIDUAL HOUSEHOLD LATRINES
33 RSM RURAL SANITARY MARTS
34 PLF PANCHAYAT LEVEL FEDERATION
35 PMGSY PRADHAN MANTRI GRAM SADAK YOJANA
36 RIDF RURAL INFRASTRUCTURE DEVELOPMENT FUND
37 TNCDW TAMILNADU CORPORATION FOR DEVELOPMENT OF WOMEN
38 SASTA SOCIAL AUDIT SOCIETY OF TAMILNADU
39 MFI MICRO FINANCE INSTITUTION
40 NCVT NATIONAL COUNCIL FOR VOCATIONAL TRAINING
41 DGET DIRECTOR GENERAL OF EMPLOYMENT TRAINING
42 SLF SLUM LEVEL FEDERATION
43 RGPSA RAJIV GANDHI PANCHAYAT SASHAKTIKARAN ABHIYAN
44 SIFFS SOUTH INDIAN FEDERATION O F FISHERMEN SOCIETIES
45 DIO DISTRICT IMPLEMENTATION OFFICE
46 FMS FISH MARKETING SOCIETY
47 TEAP TSUNAMI EMERGENCY ASSISTANCE PROJECT
48 RGRP RAJIV GANDHI REHABILITATION PACKAGE
49 ETRP EMERGENCY TSUNAMI RECONSTRUCTION PROJET
50 IFAD INTERNATIONAL FUND FOR AGRICULTURAL DEVELOPMENT
51 CRC CLUSTER RESOURCE CENTRE
52 IMSC INTEGRATED MEN SANITARY COMPLEX
53 VPRC VILLAGE POVERTY REDUCTION COMMITTEE
54 SAC SOCIAT AUDIT COMMITTEE
55 VDP VILLAGE DEVELOPMENT PLAN
56 CLG COMMON LIVELIHOOD GROUP
57 PVP PUDHU VAAZHVU PROJECT
58 CDD COMMUNITY DRIVEN DEVELOPMENT
59 SPMU STATE PROJECT MANAGEMENT UNIT
60 EAF ECONOMIC ACTIVITY FEDERATION
61 SSA SARVA SHIKSHA  ABHIYAN
62 RMRDP RESEARCH METHODOLOGY FOR RURAL DEVELOPMENT PROFESSIONALS
63 CDLG CAPACITY DEVELOPMENT OF LOCAL GOVERNANCE
64 CA-CDS CAPACITY ASSESSMENT AND CAPACITY DEVELOPMENT STRATEGY
65 TNA TRAINING NEEDS ASSESSMENT
66 NAP NATIONAL AFFORESTATION PROGRAMME
67 CPSMS CENTRAL PLAN SCHEME MONITORING SYSTEM
68 SPPAC STATE PANCHAYAT PERFORMANCE ASSESSMENT COMMITTEE
69 PSI PANCHAYAT STRENTHENING INDEX
70 MMP MISSION MODE PROJECT
71 NCBF NATIONAL CAPACITY BUILDING FRAMEWORK
72 CB&T CAPACITY BUILDING AND TRAINING
73 LWE LEFTWING EXTREMISM AREA
74 3Fs FUNDS FUNCTION AND FUNCTIONARIES
75 LTL LAB TO LAND
76 CBNV CORE BHARAT NIRMAN VILLAGE
77 NSAP NATIONAL SOCIAL ASSISTANCE PROGRAMME
78 NMBS NATIONAL MATERNITY BENEFIT PROGRAMME
79 IGNWPS INDIRA GANDHI NATIONAL WIDOW PENSION SCHEME
80 IGNDPS INDIRA GANDHI NATIONAL DISABILITY PENSION SCHEME
81 INNOAPS INDIRA GANDHI NATIONAL OLD AGE PENSION SCHEME
82 NFBS NATIONAL FAMILY BENEFIT SCHEME
83 TANSACS TAMILNADU STATE AIDS CONTROL SOCIETY
84 NACP NATIONAL AIDS CONTROL PROGRAMME
85 NACO NATIONAL AIDS CONTROL ORGANISATION
86 RSETI RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE
87 M&IE MONITORING AND IMPACT EVALUATION
88 TNA TRAINING NEED ASSESSMENT
89 RGGSP RASTRIYA GAVRAV GRAM SABHA PURASKAR
90 CPCB CENTRAL POLLUTION CONTROL BOARD
91 TOT TRAINING OF TRAINEES
92 HACA HILL AREA CONSERVATION AUTHORITY
93 NPMDMS NATIONAL PROGRAMME OF MIDDAY MEAL IN SCHOOLS
94 KCS KITCHEN CUM STORES
95 IRDP INTEGRATED RURAL DEVELOPMENT PROGRAMME
96 AGMAT ANNAITH GRAMA ANNA MARUMALARCHI THITTAM
97 BP BLOCK PANCHAYAT
98 RD&PR RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ
99 CSS CENTRALLY SPONSORED SCHEMES
100 DP DISTRICT PANCHAYAT
101 GP GRAM PANCHAYAT
102 GS GRAM SABHA
103 IAY INDIRA AWAS YOJANA
104 ICDS INTEGRATED CHILD  DEVELOPMENT SCHEME
105 IRMA INSTITUTE OF RURAL MANAGEMTN  ANAND
106 I/O INPUT /OUTPUT
107 M&E MONITORING AND EVALUATION
108 MGNREGA MAHATMA GANDHI NATIONAL RURAL EMPLOYMENT GUARANTEE ACT
109 MoPR MINISTRY OF PANCHAYAT RAJ
110 MoRD MINITRIY  OF RURAL DEVELOPMENT
111 NGO NON GOVERNMENTAL ORGANISATION
112 NRHM NATIONAL RURAL HEALTH MISSION
113 PR PANCHAYAT RAJ
114 PRI PANCHAYAT RAJ INISTITUTION
115 PS PANCHAYAT SAMITI
116 PTG PRIMITIVE TRIBAL GROUPS
117 RGGVY RAJI GANDHI GRAMIN VIDYUTIKARAN YOJANA
118 RTI RIGHT TO INFORMATION
119 SATCOM SATELLITE COMMUNICATION
120 SGSY SWARNAJAYANTI GRAM SWAROZGAR YOJANA
121 SIRD STATE INSTITUTE OF RURAL DEVELOPMENT
122 ZP ZILLA PANCHAYAT
123 RSS RESOURCE SUPPORT TO STATES

ஓய்வு


தொடர்வண்டி நிலையங்களில் நடைமேடை பூங்காக்களில் உள்ள திண்டுகளில் அமர்ந்திருக்கும் ஓய்வு பெற்ற அலுவலர்களை பார்க்கும்பொழுது இந்த இடத்தில் நாமும் ஒரு நாள் இத மாதிரி அமர….
 

சமன்பாடு


சட்டத்தின்
முன் மட்டும்
அல்ல
கடவுளின் 
முன் கூட
யாரும் 
சமமில்லை
எங்கேயும்
எல்லாரும்
சமமில்லை
சமமில்லாத
சமன்பாடே
உலகம்

குறை


குறைகள் 
சொல்லப்படும்
போதெல்லாம்
குறுகி 
போகிறான் மனிதன்
குறைகனை
காதில்
எழுதுங்கள்
அது
மனசுக்கு அருகில்
உள்ளது.

கவிதை… புராணகதி


என்னிடமே நான் பேசி கொண்டு இருக்கிறேன்
நரசமாக இருக்கிறது உண்மைகள்
கேட்க மறுத்தாலும் பேசி கொண்டிருக்கிறது
கட்டுபாடு இழப்பதற்குள் காப்பாற்றுங்கள்
என்னுள் இருக்கும் அரிசந்திரனை
இல்லையேல் புராணகதிதான் அவனுக்கு


அப்பா

நான் 
சுமக்க 
சொல்லி 
சுமக்கவில்லை
தாய்-
சுமந்தார் 
தந்தை
தாயுமானவன்

சாத்தூர் பழைய பாலத்து பேய்


நீயாநானாவில் பேய் கதைகளை கேட்டு எனக்கு சின்ன வயதில் பக்கத்துவீட்டு மாமா சொன்ன கதை நினைவுக்கு வந்தது.

அவர் சாத்தூரில் வேலை செய்து கொண்டு இருந்தாராம். வேலை முடிந்து ஆற்று பாலத்தை தாண்டி தான் அவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டும் . அந்தபாலம் முன்பு ரொம்ப குறுகியதாக இருக்குமாம் அதனால் நிறைய விபத்துக்கள் அங்கே நடந்துள்ளதால் பேய் நடமாட்டம் இருக்குமாம்.

அந்த குறிப்பிட்ட நாளில் வழக்கமாக கூட வரும் பையன் வராததால் இவர் மட்டும் சைக்கிளைஓட்டிக்கொண்டு சென்று கொண்டு இருந்தாராம் பாலத்தை பயந்து கொண்டே கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது சைக்கிளை மிதிப்பதில் ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கு என்ன ஆச்சு என்று அவருக்கு தெரியல. சைக்கிளை மிதிக்கவே முடியாத அளவுக்கு ஆகிவிட தை யரித்தை வரவழைத்து பின்னால் திரும்பினால் கேரியரில் யாரோ ஒரு ஆளு ஒல்லியாகத்தான் அமர்ந்து உட்கார்ந்திருக்கிறார்.

லேசா மாமாவுக்கு பயம் தட்டியது. ஒல்லியா இருக்கிறவனை வைத்தா வண்டியை மிதிக்க முடியல. உட்கார்ந்திருப்பது பேய் தான் என்று உறுதியாகிவிட்டது .பயந்தாலே இறங்கினலோ தன்னை அடித்துவிடும் என்று நேரா பார்த்தவாறு நடுபாலத்திற்கு சைக்கிளை கஷ்டப்பட்டு மிதித்து வந்து விட்டார். 

திடீரென்று “அண்ணே கொஞ்சம் வெற்றிலை இருந்தா கொடுங்களேன்”
என்று அந்த பேய் கேட்டிருக்கிறது ஆஹா வசமாக மாட்டிகிட்டோம் நமக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருப்பது எப்படி புது ஆளுக்கு தெரியும் இது பேய்தான் என்று மனதில் நினைத்து வேகமாக சைக்கிளை மிதிக்க வெற்றிலை கொடுங்க அண்ணெ என்று மீண்டும் மீண்டும் நச்சரிக்க ஆரம்பித்து வி ட்டது .மாமாவுக்கு பயமிகுதியில் வேர்த்து வழிய ஆரம்பித்துவிட்டது.

பாலத்து முடிவில் இருக்கும் விளக்கொளிக்கு போய்விட்டால் தப்பிச்சிடலாம் என்று வேகமாக அழுத்தினாராம் சைக்கிளை. அந்த பேய் டபார்ன்னு முன்னால் வந்து அந்த நின்னு வெற்றிலை கொடு அண்ணே என மறித்து விட்டது.

மாமாவுக்கு யாரோ சொன்ன நியாபகம் வர இரு எடுக்கிறேன் என்று வெற்றிலையை எடுக்கும் சாக்கில் சுண்ணாம்பு டப்பியில் உள்ள சுண்ணாம்பை எடுத்து விரலில் வைத்து அந்த பேயிடம் காட்டினராம் .. பேய் சடாரேன மறைந்து வி ட்டதாம் …… மாமா வீடு வந்து சேர்ந்து இரண்டு நாள் காய்ச்சல் . பயத்தில் அந்த ஊரை விட்டு வந்து திருநெல்வேலிக்கு வேலைக்கு வந்து விட்டார◌ாம்…….

நான் யாரு?


மாடியில் துணி காயபோட்டுவிட்டு அவரும் அவர் மனைவியும் கீழே இறங்கி கொண்டிருந்தார்கள்

“ஏங்க நான் கடைக்கு போய் காய் ஏதாவது வந்திருக்கான்னு பார்த்திட்டு வாங்கி வாரேன். நீங்க வீட்டுக்கு போங்க “

கடைசி படி இறங்கி மனைவி கடைக்கு போவதை வெறிக்க பார்த்துவிட்டு திரும்பியவரின் மண்டையில் மின்னலேன சின்னவலி வந்து போய் சரியாயிற்று. நடந்து சென்ற அவர் கதவை திறந்து உள்ளே நுழைய எத்தனிக்கையில்

“சார் என்ன வேண்டும் நான் இங்க இருக்கிறேன் “

என்று வண்டியை துடைத்து கொண்டிருந்த மணி சத்தமிட, அப்பொழுது தான் தவறான வீட்டில் நுழைந்து விட்டது தெரிய , திரும்பினால் தானே நம் வீடு வரும் என லேசாக நினைவு வந்தது. அவர் நடந்தார் திரும்பினார். திரும்பினால் வரிசையாக இருந்த நாலு வீடுகளும் கதவு சாத்தி இருந்தன. அதில் அவருடைய வீடு எது என அவருக்கு நினைவுக்கு வரவில்லை. என்ன செய்வது . கடைக்கு போன அவர் மனைவியும் வரவில்லை. எல்லா வீட்டுகதவுகளை தட்டுவது சரியானதாக இருக்காது என நினைத்து , மனைவியை தேடி கடைக்கு போவதாக முடிவெடுத்து நடந்தார். நடந்து கொண்டே இருந்தார் கடை வரவில்லை. சாலை நீண்டு கொண்டே சென்றது யாராவது தெரிந்தவர் வருகிறார்கள் என அவர் கண்கள் அலைந்தன ஆனால் எந்த முகமும் அவருக்கு தெரிந்ததாக இல்லை. ரொம்ப தூரம் வந்து விட்டதாக மனது சொல்ல என்ன செய்வதென்று அறியாமல் கண்ணில் தெரிந்த பிள்ளையார் கோவிலில் போய் அமர்ந்தார். லேசாக கண் அயர்ந்து விட்டார். திடீரென்று விழிப்பு வர அய்யோ நம்மளை தேட ஆரம்பித்து
இருப்பார்களே என்ற பதட்டம் வர, பக்கத்தில் உள்ள டெலிபோன் பூத்தில் போய் போன் பண்ணலாம் என சென்றார். எந்த எண்களும் நினைவுக்கு வரவில்லை. கஷ்டப்பட்டு யோசித்ததில் பழைய நண்பன் கணபதியின் தொலைபேசி எண் நினைவுக்கு வர தொலைபேசி பண்ணினார் . அழைப்பு சென்று கொண்டிருந்தது. யாரும் எடுக்கவில்லை. பதட்டம் பற்றி கொள்ள அவருக்கு வேர்க்க ஆரம்பித்தது. அழைப்பு கட்டாகி விட அவருக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது. இன்னொரு  தடவை முயற்சிக்காலம் என்று போன் செய்தார். நல்லவேளை இப்ப ஒரு பெண் எடுக்க

“கணபதி இருக்காங்களா”

“அவரு வெளியே போயிருக்கார்
நீங்க யாரு”

‘நான் …………….’
ஆமா என் பெயர் ………………………………..”

அவருக்கு நினைவுக்கு வரவேயில்லை.

 

விட்டேத்திகள்


கிராமங்களில் சிலர் விட்டேத்தியாக இருப்பார்கள் யார் என்ன வேலை சொன்னாலும் செய்வார்கள்.திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். கூலி பேச மாட்டார்கள் . சாப்பிட சொன்னால் சாப்பிடுவார்கள் கோயில் விழா கல்யாண விழாக்களில் அவர்களாக சென்று வேலை செய்வார்கள் கொடுப்பதை வாங்கி செல்வார்கள் கோயில் குளக்கரை கிடைத்த இடத்தில் படுத்து உறங்குவார்கள். அவர்களுக்கு உடல் நலமில்லை என்பதை யாராவது கவனித்து மருந்து மாத்திரை கொடுத்தால் உண்டு. இப்படி வாழ்ந்து வருபவர்களை காட்டிலும்  பற்று அற்றவன் என தான் செய்வதை  அறிந்து ஏதும் செய்யாமல்  சாமியாராக அலைபவர்கள் எந்த வகையில் உயர்ந்தவர்கள்.

அதை போல  சிலர் படித்தவர்கள் என்கிறார்கள்.  பாடதிட்ட படி பாடம் படித்து சான்றிதழ் வாங்கினால் தான் படிப்பா. மே வங்காளத்தில் வங்காளம் தெரியலைன்னா   எந்த பஸ் எங்க போகுதுன்னு தெரியாது. அந்த இடத்தில் நாம் படிக்காதவன் தானே. சின்னவயதில் மெக்கானிக்கா சோந்து  தலை சிறந்த மெக்கானிக்கா பிளம்பர் எலெக்டரிஷியனா இருப்பவர்கள் கல்லாதவர்கள் என்று எப்டி சொல்ல முடியும். பியந்த போன செருப்பை நம்மால் தைக்க தெரியாது அதை தெரிந்தவர் அந்த தொழிலை ப டித்தவர்தானே. எனக்கென்னவோ எல்லாரும் எதையோ படித்தவர்களாகத்தான் தெரிகிறது.

என்ன ஏசி அறையோ பாதுகாப்பான தொழிலோ. உத்தரவாதமான வேலையோ இருக்காது. எழுத படிக்க தெரியாமல் இருக்கலாம் ஆனால் கல்வி அறிவு இல்லாதவர் என குறிப்பிடுவது சரியா…..ஃ