தொடர்வண்டியில் சாட்டிலைட்போன்

நேற்று செங்கல்பட்டு 6.35 விரைவு வண்டியில் நண்பர்களுடன் ஏறிய பொழுது மற்ற நண்பர்களுக்கு இருக்கை கிடைத்த து எனக்கு கிடைக்கவில்லை சன்னல் ஒரம் ஒரு மனிதர் தலையில் சிகப்பு சிறு துணியை தலையில் தலைப்பாகை போல  கட்டியிருந்தார். கருப்பு சட்டை போட்டு ஆந்திர மக்கள் வேட்டி கட்டும் பாணியில் வேட்டி கட்டி அமர்ந்து இருந்தார் .அவர் இரண்டு துணிபைகளை உட்காரும் இடத்தில் வைத்திருந்தார்  அவற்றை எடுங்கள் என்று சைகை காட்டியும் எடுக்காமல் இருந்தார் மீண்டும் வலியுறுத்தியதால் பைகளை எடுத்து கொள்ளவே கொஞ்சம் இடம் கிடைத்த து. அதில் நுனியில் உட்கார்ந்து அமர்ந்தேன்.

       திடீரென்று அந்தாள் தெலுங்கோ கன்னடமோ செல்போனில்  பேச ஆரம்பித்தர்  நல்ல சத்தம். நிறுத்தாமல்  பேசி கொண்டிருந்தார் நெருக்கமாக உட்கார்ந்திருந்தால்  என் காதினுள்  பேசியது போல் சத்தமாக இருந்த து. மாம்பலம் தாண்டியும் அவர் பேச்சை விடவில்லை. எதிர்பக்கம் அமர்ந்திருந்த ஒருவர் என் அவஸ்தையை பார்த்து பேச்சை நிப்பாட்டு என்று சொன்னார் ஆனால் அவர் அதை சட்டை செய்யவே இல்லை. எதிர்  சீட்டுக்கார்ர்  தெலுங்கு  பார்ட்டியை  கூர்ந்து கவனித்தார். அந்த தெலுங்கு பார்ட்டி திப்பெட்டியை வைத்து செல்போன் மாதரி பேசிட்டு இருந்த்தை கண்டு பிடித்தார் . எல்லாருக்கும் செம காண்டு ஆகி போச்சு. உடனே பேச்சை நிப்பாட்டலைன்னா பைகளை வெளியே போட்டு விடுவதாக சத்தம் போட்டார் ஆனாலும் பார்ட்டி கேட்பதாக இல்லை.

   முதலில் பேசிய தீப்பெட்டியை உள்ளே வைத்து விட்டு இன்னொரு தீப்பெட்டி எடுத்து சத்தமாக பேச ஆரம்பித்தார் . அந்த தீப்பெட்டியை திறந்து 100 ரூபாய் தாளையும் ஒரு 10 ரூபாய் தாளையும் உள்ளே வைத்தார் டப் ஆப் பண்ணுகிறார் போல .

    அதற்குள் பெட்டியில் உள்ள அனைவருக்கும் இது அரைலூசுன்னு தெரிஞ்சி போச்சு .  சார் அந்தாளிடம் செல் போனை வாங்கி தாங்க சார் நாங்களும் பேசிட்டு தருகிறோம் என்ற கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் அந்த தெலுங்கு கிறாக்கு பேசி கிட்டே தான் இருந்துச்சு  அதை கேட்க கேட்க மக்களுக்கு சிரிப்பு அடக்க முடியல. ஒரு கட்டத்தில் பிரதமர் மந்திரிக்கு போன் பேச ஆரம்பிச்சிட்டார் .

      நிறுத்த சொல்லி  அழுத்து போன எதிர் சீட்க்கார்ர். தன்னுடைய பையிலிருந்து அவித்த மக்காசோள கதிரை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். திடீரென்று அவர் நம்ம அரசியல்வாதிகள் மக்களின் வாயை அடைக்க பயன்படுத்தும் பாணியில் அந்த மக்காசோள கதிரை தெலுங்க பார்ட்டியிடம் கொடுக்க தெலுங்கு பார்ட்டி வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டது. அன்னாரின் செல்போன் பேச்சு தடைபட்டது தப்பித்தோம் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அ ந்த பார்ட்டி சாப்பிட  வேகத்தை பார்த்தால் தாம்பரம் வருவதற்குள் மக்காசோளத்தை  தின்று முடித்துவிடும் போல இருந்த து . முடித்துவிட்டு மீண்டும தீப்பெட்டி செல்போனை எடுத்து தெலுங்கில் மாட்டிலாடின்னா நான்  தெலுங்க கங்காவில் குதித்து தற்கொலை செய்வது என முடிவெடுத்து விட்டேன் . நல்ல வேளை தாம்பரத்தில் பார்ட்டி இறங்க எழுந்தது.  சீட்டுக்கடியில் இருந்து இரண்டு முருங்கை குச்சிகளை  எடுத்து கையில் பிடித்து கொண்டு நகர  எல்லாரும் கண்களை மூடிக்கொண்டார்கள் கண்ணில் குத்தி விட்டால் என்ன செய்வது என்ற முன்ஜாக்கிரதை தான். நண்பர் மாப்பிள செல்போன்னு நினைத்தோம் சாட்டிலைட் போன் போல ஆண்டனாவை கையில் பிடித்து கொண்டு போறார் பாரு என்றார். எப்படியோ தாம்பரத்தில் இறங்கி விட்டார் .வண்டி தாம்பரத்தில் இருந்து கிளம்பியது. அப்ப எதிர் சீட்க்கார்ர் செல் போன் சிணுங்கியது.  நாங்கெல்லாம் சார் தெலுங்கு  பார்ட்டியா இருக்க போகிறது என்று சொல்ல பெட்டியே குலுங்கியது சிரிப்பில்

Advertisements

பரதேசி

பரதேசி ,,. எல்லாரும் நல்லா நடிச்சிருங்க…ஆன படம் பப்படம்… கருப்பு வெள்ளையிலேயே எடுத்திருக்கலாம். பாடல்கள் சொதப்பல்..
சாலூர் கிராமத்து மக்களுக்கு வால்பாறை போன்ற தேயிலை எஸ்டேட்களில் வேலை செய்ய கங்காணியில் அழைத்து செல்லப்பட்டு வாங்கிய முன்பணத்துக்கு உழைத்தும் உழைத்த கூலியை ஏமாற்றி புடுங்கிகொள்ளும் கங்காணிகளின் கைககூலிகள்… அவர்கள் பட்ட அவலங்கள்… மனதை பிழிகின்றன.
வெள்ளைக்காரர்கள் செய்யும் கல்வி்ச்சேவையிலும் மருத்துவ சேவையிலும் மதமாற்றம் மேலோங்கி இருந்தது என்ற உண்மையை தோலுரித்து காட்டிய பாலாவுக்கு பாராட்டு. வெள்ளைகார முதலாளிகள் கொத்தடிமைகளை தங்களது அந்தபுரத்து ஆசைகளுக்கு அடிபணிய வைக்கும் முதலாளித்தீமிர் . கடைசிவரை ஒரு ரட்சகன் வராமல் ரட்சிக்கப்படாமல் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக முடிக்கிறார்.

இன்றைக்கும் இதே கொத்தடிமைத்தனம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தகவல் தொழில் நுட்பத்துறை சான்றிதழை வாங்கி வைத்து இரண்டாண்டு ஒப்பந்தம் போடுதல்… வழக்குஎண்ணில் காட்டப்பட்ட முறுக்கு கம்பெணிகள்.. செங்கல் சூளைகள் தீப்பெட்டி தொழிற்சாலைகள் கல் கோரிக்ள எல்லாவற்றிலும் அப்பன் வாங்கிற கடனை அடைக்க உழைக்கும் உழைத்துக் கொண்டிருக்ககும் கொத்தடிமைகள் அன்றும் இன்றும் என்றும்….. இருந்தார்கள் இருக்கிறார்கள் இருப்பார்கள்.

பிரிட்டிஷ்காரர்கள் தமிழர்களை கூலிகளாகத்தான் வெளி நாடுக்களுக்கு அனுப்பினார்கள் நமக்கு அந்நாடுகளில் கூலி என்ற அடிமை பெயர் உண்டு… இன்று இந்திய முதலாளிகள் அன்று வெள்ளைக்கார முதலாளிகள் மற்றபடி காட்சிகள் மாறவில்லை…

1939வாக்கில் மலை பிரதேசங்களில் தகரத்தால் வீடுகள் இல்லையா ஓலையிலா இருந்துச்சு யாராவது தெரிஞ்ச சொல்லுங்க பசுமையான மலையை கூட கருப்பு வெள்ளையாய் காட்டி வறட்சியாக்கி உள்ளார் பாலா.
கிராம மக்களிடம் உள்ள இரட்டை அர்த்த பேச்சுகள் ” பெரியப்பாக்கு எத்தனை பெரியம்மா என்பது அவர் மந்திரிக்குத்தான் தெரியும்” இயல்பாக பொருந்துகின்றன. உறவுகள் இயல்பாக காட்டப்பட்டுள்ளது… பாலா ரொம்ப கஷ்டப்பட்டு நம்மை கஷ்படப்படுத்தி விட்டார்.பாலா படத்தில் எல்லாவற்றிலும் கடைசியில் ஒரு வரை கொல்லுவார் இந்த படத்தில் ரசிகர்களை தூக்கில் போட்டு கொன்று உள்ளார். இவ்வாண்டின் சிறந்து டாக்குமெண்டரி படத்திற்கான விருது உறுதி

வாகை சூட வா ஏன் வாகை சூடியது…….. இப்படம் ஏன்

பரதேசி

சினிமா பாலாவின்

பரதேசி

பரதேசி paradesi

காதலில் தோல்விஅழகு

நாய் பூனை

திருமண நாளோன்றில்

சன்னல் தூவாரமொன்றின்

வழியே ஒளி புகுந்து

காது மடல் சூடேற்றும்

தாய்புலி பல் லாவகத்தில்

பல்சரின் வேகத்தில்

காது மடல் கடித்த காதல்

சிந்தையில் பூக்க

காப்பி மனம்

அறையில் வியாபித்தது

எழுச்சொல்லி

அன்னையின் குரல்

சன்னமாய் காதில்

காது மடலா

காதா

திருமணமே நடக்கவில்லை

மாமியர்  மருமகள்

ஆரம்பித்து விட்டார்கள்

புரண்டு படுத்து

புறமுதுகு காட்டினேன்

காதலில் தோல்விஅழகு

விடுமுறை நாள்

வயிற்றை முட்டிக்கொண்டு

விழிப்பு வந்தது

விடிந்தும் மேத்துடன்

போட்டியிட்டு தோற்ற கதிர்கள்

சாம்பல் பூசிய  காலை

நிலவை தொலைத்து விட்ட

வானம்  மெல்லிய விசும்பலாய்

வெயிலே அழுது கொண்டிருக்கிறது

மணி 7 யை  தாண்டிவிட்டது

காப்பி குடிக்க ஒரு தவிப்பு

வீட்டு நிலவும் இன்னும் போர்வைக்குள்

பால் சூட வைக்கும் பொழுதெல்லாம்

பொங்கி  வழிந்து

மனைவியிடம் வழிசலாக போனதால்

அடுப்படி செல்ல ஆயாசமாக இருந்தது

விடிந்து விட்டதை அறிவிக்க

தொலைகாட்சியில்  செய்தியை சத்தமாக வைக்க

விடுமுறை நாள் தானே கொஞ்சம் தூங்கவிடுங்க

எதிர்வினையானது

காலையிலேயே  சண்டையை  ஆரம்பித்து விட்டீர்களா

பெண் வாரிசு

வெளியே இடியுடன்  மழை வலுத்தது

இப்படியாக நாள் தொடங்கியது

குழப்பமான மனநிலை Pandaemonium திரைப்படம்

Pandaemonium எனும் ஆங்கில திரைப்படம் 2000 வெளிவந்த படம் இதன் இயக்குநர் சுலியன் டெம்பிள் (Julien Temple, ). இந்த படம் ஆங்கில கவிஞர்கள் சாமுவேல் டெய்லர் கொல்ரிட்ஜ்Samuel Taylor Coleridge a மற்றும் வில்லியம் வெர்டஸ்வர்த்William Wordswo

rth இருவரும் இனைந்த எழுதிய ,”Lyrical Ballads”, மற்றமு; கொல்ரிட்ஜ் எழுதிய குபூல கான் Kubla Khan. எனும் கவிதை பற்றியது

படத்தை 10 நிமிடம் கழித்து தான் பார்த்தேன் . கொல்ரிட்ஜ் மனைவி அவனது குழந்தையை பார்த்து கொள்ள சொல்ல அவன் வெளியே அந்த பனி விழும் இரவில் காணும் காட்சியை கவிதை வடிப்பதை காட்சிபடுத்திய விதத்தை கண்டு வியந்த படத்தை தொடர்ந்தேன் . கவிஞன் கற்பனைகளை படத்தில் காட்சிகளாக விரிந்து அவனின் வரிகள் பரிணாமிக்கிற அழகு படமே ஒரு கவிதை.

கொல்ரிட்ஜ் முதலில் எழுதியThe Rime of the Ancient Mariner.பெரும் பெயரை அவனுக்கு வாங்கிதருகிறது. மேலும் அபினில் போதையில் Ballads ன் தனக்குரிய பகுதியை எழுதி தள்ள வெர்டஸ்வர்த் தன்னால் எழுத முடியாது கண்டு கலக்கமும்பொறாமையும் கொள்கிறான். பின்பு உரைநடையாக சொல்லி Lyrical Ballads முற்று பெற்று அமோக விற்பனை அடைகிறது.

Lyrical Ballads எழுதுவதில் வெர்ட்ஸ்வர்த்தின் தங்கை டார்தி கொல்ரிட்ஜ்க்கு உதவி செய்கிறாள் . அதெல்லாம் வெர்ட்ஸ்வர்த் பிடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பொறமை கிளம்பிவிடுகிறது .குபூல கான் எழுதி முடிக்கமுடியாமல் அபினின் போதையில் தவிக்கிற◌ார் கொல்ர்ட்ஜ் . அதை வெளி வந்தால் தனது புகழ் மழுங்கடிக்கப்படும் பிரிட்டன் சிறந்த கவிஞன் பட்டம் தன்க்கு கிடைக்காது என கவலை படும் வொட்ஸ்வர்த் கொல்டரிஜ்யை விட்டு பிரிகிறான்.

கொல்டரிஜ் வொர்டஸ்வர்தை பிரிந்து சென்றதால் எழுதுமுடியாமல் கற்பனைவுலகில் தவித்து அபின் மயக்கத்தில சிக்குண்டு நோய்வாய்பட்டு உழலுகிறான்.. அவனுடைய முற்று பெறாத Kubla Khan பைரன் துரை விலைக்கேட்டும் கொடுக்கமுடியாத நிலைக்கு தள்ளபட்டு அவனாலெயே தீக்கிரையாகிறது. அந்த Kubla Khanஎன்னவாகிறது என்பதை படத்தில் காண்க.

நிறைய பரிசுகள் பெற்ற படம் . கவிதை ரசனை உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம்

சென்னை நகரில், “கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது’ என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,

“புகை பிடிக்கும் ஆண்களின் சதவிகிதத்தை எட்டி பிடித்து தங்களது சமஉரிமையை நிலைநாட்டிவிடுவார்கள் “

விஸ்வரூபம்

என் உயரம்
எனக்கு தெரியவில்லை
என் தாழ்வு
எனக்கு தெரியவில்லை

மேலிருந்து விழ்ந்த
தாழம்பூ
சொன்னதை
இடைபறந்த
அன்னம்
தெரிவிக்க
நம்பி கெட்ட
பிரம்மனாய்
நானும் 
என்னை 
அறிந்து
கொண்டிருப்பதாக
கற்பனை
நீ இப்படிதான்
என நீ சொன்னதில்

——-pitchumani