பெண் விடுதலை


கோயிலின் பிரமாண்டம் வியப்பில் ஆழ்த்தியது வரதராசபெருமாள் கோயில் தெலுங்கில் கல்வெட்டுகள் நிறைய இருக்க யார் கட்டியது என்று வினவினால் கிருஸ்ணதேவராயர் கட்டியது என்றார்கள். பெரிய பெருமாள் நான் கோயில்கள் செல்லும் பொழுது எம்மக்களின் பொறியல் திறன் கட்டடக்கலை கண்டு வியந்து நிற்பேன்.

அதைவிட பெரிய வியப்பு துணிக்கடையின் நுழைந்த போது பாபு லால் துணிக்கடைன்னு நினைக்க அங்கே எல்லா பெண் வாடிக்கையாளர்களும் சேலைகளின் சேலைகளை தெரிவு செய்யும் கடவுளை கண்ட பரவசத்தை அவர்கள் கண்ணில் கண்டேன. ஏனே இந்திய பெண்கள் எந்த ஜன்மத்திலும் விடுதலை பெற மாட்டார்கள் என்ற எண்ணம் வந்தது….. இப்படி புடவைக்கு நகைக்கும் அடிமைப்பட்டால் இதை காட்டியே உங்களை தங்களுக்கு கீழ் ஆண்வர்க்கம் அடக்கிதான் வைக்கும்….

புடவைக்கும் நகைக்கும் ஆசைபடா பெண்களை கண்டால் காணவில்லை ஆசையில்லாத மாதிரி நடிக்கும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறேன்.

அதைபோல் நகைகடையில் லட்சம் துணி எடுத்தாலும் கூட இரண்டு இலவச பைகளை வாங்கவிட்டால் இந்த பெண்களுக்கு திருப்தி வரவரவே வராது……

பெண்களே உங்கள் விடுதலை உங்கள் கையில் இந்த ஆசைகளில் இருந்து முதலில் விடுதலை அடையுங்கள் அதைவிட்டு ஆண்களை குறை சொல்லாதீர்கள்

பயணங்கள்


எங்கவாது

எதிர் பட்டுவிடுவாயோ

படமாட்டயோ

தினமும் பயணங்கள்

ஏன் கிரித்தவர்கள் இப்படி இருக்காங்க (why christians doing like this)ஒரு கிரிஸ்தவ அலுவலக பெண் பேசிக்கொண்டிருந்தார்
.சார் மகள் என்ன செய்றாப்பல.

நான் சொன்னேன்

வரன் பார்த்தாச்சா,?.

பார்த்துகிட்டு இருக்கோம் .
செட்ஆகல.

நான் என் பெரியவளாக இருந்தவுடனே ப்ரேயர் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இப்ப பாருங்க மருமகனாக நல்ல மகன் கிடைத்துள்ளான.

சரிம்மா என்றேன் நான்.

உங்க மகள் பெயர் சொல்லுங்க.

சொன்னேன்.

நாளையிலிருந்து உங்க மகளுக்காக ப்ரேயர் செய்கிறேன்…..

. நான் என்ன சொல்ல முடியும்…….

..என் கடவுள் என் பிள்ளைக்கு நல்ல வரன் பார்த்து தருவார் என்றா.

ஒன்னும் புரியல.இவர்கள் ஏன் அடுத்த மதத்காரர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள… இயல்பாகவே இவர்களின் பேச்சு நம்மை மதம்மாற்றிவிடவேண்டும் எனும் திசையில் அவர்களை அறியாமலேயே நுழைந்து விடுகிறதா………

ஆனால் நமமதத்துகாரன் ஏன் நம்ம சொந்தகாரன் ஒரு பேச்சுக்கு கூட அப்படி சொல்லமாட்டான் என்பது அதைவிட எதார்த்தம்……. நம்ம கஷ்டம் அவனுக்கு அதைவிட ரொம்ப சந்தோஷ்ம் .

அட போங்கடா ……………….

மகிழ்ச்சிஒரு வரவேற்புக்கு சென்று விட்டு பல்லாவரம் ரெயில் நிலையத்தில் அலுவலக நண்பருடன் பேசி கொண்டிருந்தேன் செங்கல்பட்டு ரயில் வர ரொம்ப நேரம் ஆகி கொண்டிருந்தது மணி 8.30 க்கு மேல் இருக்கும் . அந்த இரவிலும் பழம் விற்றுக்கொண்டிருந்த பெண் ஒரு பிளாஸ்டிக் கவர் நிறைய சீதாப்பழம் முதலில் 50 ரூ என்று விற்றது நேரம் ஆக ஆக 40 ரூ என்று விற்றார்கள். இடையில் தெரிஞ்க ஒரு இளைஞனிடம் அவன் தண்ணீ அடிப்பதைஅவனின் கெர்ள் பிரண்டை பற்றி விசாரிப்பு சிரிப்புடன் எனர்ஜி எதும் குறையாமல் பார்த்து கொண்டிருந்த நண்பர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் பாருங்க நம்ம மாதம் சம்பளம் வாங்கிட்டு விழி பிதுங்கி கஷ்டப்படுதோம். இவர்கள் அன்றாட வருமானம் என்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள………………… நான்அப்படித்தானோ என நினைத்தேன். விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்கும். நடுநிலை ப்பள்ளி படிக்கையில் ஆரம்ப பள்ளி காலமம் மகிழ்ச்சியானது போல தோன்றும் பின் உயர்நிலைப்பள்ளி படிக்கும் பொழுது நடுநிலைப்பள்ளி காலம் மகிழ்ச்சியானது போல் தோன்றும் நடுவயதில் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என தோன்றும…. நமக்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது மட்டும் தெரிகிறது. அங்கேயும் சில கஷ்டங்கள் இருக்கும். எதிர்பார்ப்பு குறைவு என்பதால் கஷ்டமும் குறைவாக இருக்கும்.. அப்படித்தானே

kavithai4


முற்று புள்ளிகள்

மனதால்

வால் முளைக்கின்றன

நறுக்குவதா

மனிதன் குரங்குதானே

kavithai 3


காதல் தோற்பதில்லை

உயிரோடு புதைக்க படுகின்றன

நினைவுகளால் உயிர்ப்பிக்க படுகின்றன

kavithai 2


பெயர்க்கு

கால்முளைக்கும்

அலங்காரம் செய்யும்

பேசும்

கொஞ்சும்

கோபப்படும்

மரங்களை கீறும்

பார்

kavithai


பிரிகையில் தானே

பிரியம் தெரிகிறது

—————–

வேலை வெட்டி இல்லாமல் தனிமை பயமாக …

. உன் நினைவுகள் நெஞ்சிலமர்ந்து நையாண்டி பேசும்

நான் ஒரு கோ………….. ழை—————–

பெயரில் என்ன இருக்கிறதுஎன்று நினைக்கிறீர்களா? நிறைய இருக்கு. என் மகளின் வங்கியில் ஒரு பாட்டி அம்மா மோடியின் 12 ரூ விபத்து காப்பீடு மற்றும் 300 ரூ ஆயுள் காப்பீடு விண்ணப்பம் சமர்ப்பித்து உள்ளது. அந்த பாட்டியின் அக்கவுண்டை செக் பண்ணிய பொழுது ரொம்ப நாள் அப்ரேட் பண்ணாததால் கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.

என் மகள்
அந்த பாட்டியிடம்

“எங்க பாட்டியின் பெயரான
இசக்கியம்மாள் ன்னு இருக்கு அதனால்அக்கவுண்டை ரீலிஸ் உடனே செய்கிறேன்” என்று ரீலிஸ் செய்து மேற்படி திட்டத்தில் சேர்த்து விட்டார்.
அப்பறம்
எந்து ஊருமா ன்னு பாட்டி கேட்க

:’திருநெல்வேலின்னு” சொல்ல
“எனக்கும் திருநெல்வேலி” ன்னு பாட்டி சொல்ல

இரண்டு பேரும் ப்ரண்டாகிட்டாங்க.
இதை போல் நமது மகளின் பெயர் முன்னாள்களின் பெயர் மக்னின் பெயர் முக்கிய உறவுகளின் பெயர் லவ்வர்ஸ் கொஞ்சம சலுகை யை சம்பாதித்து விடுகின்றன

பெண்ணாய் பிற்ந்தால் தாயோடு தற்கொலை செய்யப்படுவாய் மகளே


எங்க ஏரியாவிற்கு அருகில் உள்ள கிணற்றில் ஒரு தாய் தன் 4 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். மக்கள் பேசி கொண்டதிலிருந்து அந்த அம்மாவின் மாமியார் அவரின் மகனிடம் உன் மணைவி மற்றொரு ஆனுடன் பேசிக்கொண்டிருந்ததாக சொல்லி அது சண்டை வெடித்து தற்கொலையில் முடிந்திருக்கும. இதற்குள் நாம் நுழைய வேண்டாம் . தற்கொலை செய்த அந்த தாய்க்கு ஒரு மகனும் இருக்கிறார். ஏன் அந்த பையனை தற்கொலை செய்யும் பொழுது கூட்டி செல்லவில்லை. தனக்கு பின் தன் பிள்ளை கஷ்டப்படக்கூடாதென்றால் பையனை ஏன் விட வேண்டும் பெண்பிள்ளையை ஏன் தன்னோடு அழைத்து கொண்டு தற்கொலை செய்யவேண்டும். ஆண் பிள்ளை கை வைத்து கரணம் போட்டு பிழைத்து கொள்வான் என்ற சொலவடையை நிணைக்கத்தோன்றுகிறது.பெண்ணை பிற்ந்த பாவத்திற்காக தன் தாயோடு சேர்ந்து தற்கொலை செய்விக்க மட்டும் அந்த மகளுக்காக இந்த சமுதாயதத்தின் மீது கோபம் வருகிறது. இதை மட்டும் தான் நம்மால் செய்யமுடியு